search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் எச்சரிக்கை"

    • கன மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளில் கன மழை.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதன் தொடர்ச்சியாக வருகிற 4 மற்றும் 5-ந் ேததிகளில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×