search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்சர் படேல்"

    • ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.
    • பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள ரிஸ்வான் ஆசிய கோப்பை மற்றும் பாகிஸ்தான் மண்ணில் நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அதிக ரன்கள் அடித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இதேபோல், பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    • உலகக்கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேலால் தாக்கத்தை ஏற்படுத்த இயலும்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அக்‌ஷர் படேல் 8 விக்கெட் கைப்பற்றி (3 ஆட்டம்) தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அஜய் ஜடேஜா கூறியதாவது:-

    ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் ஆடவில்லை. அவரது இடத்தில் அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் அதை மிகவும் சரியாக பயன்படுத்தி கொண்டார்.

    ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் வரிசைக்கு மாற்றாக அக்‌ஷர் படேல் இருக்கிறார். அவரை போன்று அக்‌ஷர் படேல் பேட்டிங் செய்கிறார். பந்து வீசுகிறார். பீல்டிங் மட்டும் இன்னும் பொருத்தமாக அமையவில்லை. உலகக்கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேலால் தாக்கத்தை ஏற்படுத்த இயலும். அணிக்கு மீண்டும் திரும்பும் போது ரவீந்திர ஜடேஜா நல்ல நிலையில் இருப்பார்.

    அஜய் ஜடேஜா

    அஜய் ஜடேஜா

    இவ்வாறு அஜய் ஜடேஜா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அக்‌ஷர் படேல் 8 விக்கெட் கைப்பற்றி (3 ஆட்டம்) தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    துபாய்:

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    இந்திய அணி தான் ஆடிய 2 போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

    ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ×