என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுபானம் விற்பனை"
- கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது.
- மதுபானங்களின் தேவை அதிகரிப்பு என்பது, மதுக்கடைகள் குறைவாக இருப்பதை காட்டுகிறது.
பீதர்:
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு மதுபானங்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனங்கள் மூலமாக மதுபானமும் விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பீதர் மாவட்டத்தில் கலால் துறை மந்திரி ஆர்.பி.திம்மாபூரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது. மதுபானங்களின் விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை குறைவாக தான் உள்ளது. சில உயர்ரக மதுபானங்களின் விலை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வருவாய் பாதிக்கப்படுகிறது. மதுபானங்களின் தேவை அதிகரிப்பு என்பது, மதுக்கடைகள் குறைவாக இருப்பதை காட்டுகிறது.
மாநிலத்தில் ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது. அதுபற்றி அரசு தரப்பில் எந்த விதமான ஆலோசனையும் இதுவரை நடக்கவில்லை. ஆன்லைன் மூலமாக மதுபானம் விற்பனை செய்ய சாத்தியமும் இல்லை. இனிவரும் நாட்களிலும் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யப்படாது. எந்த ஒரு ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாகவும் மதுபானங்கள் விற்பனை செய்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன.
- கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மதுரை:
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இந்த உத்தரவின் பேரில் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் அதன் அளவுக்கேற்ப விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. எனவே அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மேலாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு 3 நாட்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான சுரேஷ், பொன்முத்துமாரி, சக்தி மோகன், சுப்ரமணியன் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- மரக்காணம் அருகே மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர் வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தின் மதுபாட்டில் விற்பனை செய்தார். இதனை அறிந்த மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர் வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து முருகனை கைது செய்தனர். மரக்காணம் அருகே கழிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அம்சா. இவர் வீட்டு தோட்டத்தின் மது விற்றார். இவரையும் போலீசார் கைது செய்தனர்.
- கள்ளச் சந்தையில் விற்கப்படும் மது பாட்டில்கள் அனைத்து வசதிகளுடனும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
- போலீசார் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ரோசனை, தீவனூர், மேல்பாக்கம்,ஆகிய பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள்ளச் சந்தையில் விற்கப்படும் மது பாட்டில்களுடன், மது பிரியர்கள் அமர்ந்து குடிக்கும் அளவிற்கு மினரல் வாட்டர் தண்ணீர் கேன், டம்ளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. ஆனால் அதனை காவல்து றை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அப்பகுதியில் உள்ள மதுபான கடை நா ள்தோறும் 12 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு மதுபான கடை திறப்ப தற்கு முன்பு மர்ம நபர்கள் அந்த பகுதியில் சட்டவிரோதமாக காலை முதலே 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக கூறப்ப டுகிறது. மேலும் ரோசனை பகுதியில் காலை நேரத்தில் இது போன்ற கள்ளத்தனமான மது பாட்டில்கள்மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்