search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டவர் மீதுள்ள வாலிபரை போலீசார் கீழே இறக்கினர். The police brought the boy down from the tower."

    • பொதுமக்கள் கிணற்றை மீட்க பல்வேறு வகையில் போராடி வருகின்றனர் .
    • அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயா மரத்தூர் பகுதியில் இருந்த ஒரு பழைய வட்ட கிணற்றை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கிணற்றை மண்ணை கொட்டி முடியதாக தெரிகிறது.இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கிணற்றை மீட்க பல்வேறு வகையில் போராடி வருகின்றனர் .

    அதன்படி நேற்று மாலை 3 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவர் மீது வாலிபர் ஒருவர் ஏறிக்கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக கூறி சத்தம் போட்டுள்ளார். இதையறிந்த அப்பகுதிமக்கள் தாரமங்க லம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், ஓமலூர் தாசில்தார் வள்ள முனியப்பன், தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், வி.ஏ.ஓ. சத்தியராஜ் ஆகியோர் டவர் மீதுள்ள வாலிபரை கீழே இறக்கினர்.அவரிடம் விசாரித்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (வயது 32) என்பதும், கிணற்றை மீட்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஏற்கனவே கடந்த மாதம் 16-ந்தேதி அதே டவரில் ஏறி போராட்டம் நடத்திய முத்து, ரவிக்குமார் ஆகி யோரின் தூண்டுதலின் பேரில் தான் டவரில் ஏறியதாக சத்தியராஜ் கூறினார். இதையடுத்து வி.ஏ.ஓ. கொடுத்த புகாரி ன்பேரில் சத்தியராஜ், முத்து, ரவிக்குமார் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×