என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » குடியரசு துணைத்தலைவர்
நீங்கள் தேடியது "குடியரசு துணைத்தலைவர்"
- இதில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும்.
- மக்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:
உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சினை. உறுப்பு தானத்திற்கான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். மக்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிப்பதுடன், அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/09/04/1756701-dhankar-1.jpg)
இந்த முக்கியமான பிரச்சினையில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும். இந்த விஷயத்தில் சரியான சூழலை உருவாக்கும் தாதிச்சி தேஹ்தன் சமிதி அமைப்பின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்த பணியில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
×
X