என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 அடி"

    • அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை அருகே மலைப்பாம்பு ஒன்று வந்தது.
    • 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.


    நீலகிரி

    கூடலூர் வனத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி தேயிலை தோட்டங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழைந்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். பின்னர் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை அருகே மலைப்பாம்பு ஒன்று வந்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து தேயிலை தோட்ட கழக அலுவலர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நாடுகாணி வனச்சரகர் வீரமணி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தொழிற்சாலை அருகே தேயிலை செடிகளுக்கு அடியில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து அடர்ந்த வனத்தில் கொண்டு மலைப் பாம்பு விடப்பட்டது. அதன் பின்னர் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.


    • சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது.
    • சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் சென்றனர். இந்தநிலையில் கூடலூர் ஊசிமலை அருகே சாலையோரம் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் தென்பட்டது. தொடர்ந்து சாலையின் மறுபுறம் செல்ல முயன்றது. ஆனால் தடுப்பு சுவர்கள் உயரமாக இருந்ததால், ராஜநாகத்தால் உடனடியாக அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனால் ராஜநாகம் பல கட்ட முயற்சிக்குப் பிறகு சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது. இதனிடையே சாலையோரம் ராஜநாகம் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையோரம் தென்பட்டால் அதற்கு இடையூறு செய்யக்கூடாது. தானாகவே வனத்துக்குள் சென்று விடும் என்றனர்.

    ×