என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரினா சபலென்கா"

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    சபலென்கா மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 2 செட்டை இருவரும் ஆளுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
    • மியாமி ஓபன் இறுதிப் போட்டியில் சபலென்காவும் பெகுலாவும் நாளை மோதவுள்ளார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் அரையிறுதியில் அரினா சபலென்கா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார். இதில் சபலென்கா 6-2, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் 19 வயதான பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலாவும் அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலாவும் மோதினர்.

    இந்த போட்டியின் முதல் செட்டை பெகுலா 7-6 (7-3), வென்றார். அடுத்த செட்டை ஈலா 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். பரபரப்பான இறுதி செட்டில் பெகுலா 6-3 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிப் போட்டியில் சபலென்காவும் பெகுலாவும் நாளை மோதவுள்ளார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் அரையிறுதி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-2, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    • 2-வது சுற்று ஆட்டத்தில் சபலென்கா(பெலாரஸ்)- விக்டோரியா டோமோவா (பல்கேரியா) மோதினர்.
    • சபலென்கா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    புளோரிடா:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா(பெலாரஸ்)- விக்டோரியா டோமோவா (பல்கேரியா) மோதினர். இதில் சபலென்கா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் காலின்ஸ் (அமெரிக்கா), சொரானா மிஹேலா (ருமேனியா) உடன் மோதினார். இதில் காலின்ஸ் 6-4, 7-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் சக்காரி (கிரீஸ்), மசரோவா (சுவிட்சர்லாந்து), ஓன்ஸ் ஜபியர் (துனிசியா), லினெட்(போலந்து) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் பெலாரசைச் சேர்ந்தவரும், நம்பர் 1 வீராங்கனையுமான அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட மிர்ரா ஆண்ட்ரீவா அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    சமீபத்தில் நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் தொடரிலும் மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரையிறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸை (6-0, 6-1) என்ற செட் கணக்கில் சபலென்கா வீழ்த்தினார்.
    • 24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.

    இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ்- சபலென்கா பலப்பரீட்சை நடத்தினர்.

    இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸை சபலென்கா (6-0, 6-1) என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான இகா ஸ்வியாடெக் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் 17 வயது மிரா ஆன்ட்ரீவா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஆன்ட்ரீவா 7-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வியாடெக் 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். யார் வெற்றியாளர் என தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆன்ட்ரீவா வெற்றி பெற்றார்.

    இதனால் 7-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ஆன்ட்ரீவா தகுதி பெற்றார்.

    24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக மிர்ரா ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.

    • சபலென்கா 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
    • 6-4, 9-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கீஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் அரீனா சபலென்கா (பெலருசியா) சோனய் கர்தல் (பிரிட்டிஷ்) ஆகியோர் மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் மற்றும் குரோஷிய வீராங்கனை டோனா வெக்கிச் உடன் மோதினர்.

    பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை டோனா வெற்றி பெற்றார். 2-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் கீஸ் 9-7 என்ற கணக்கிலும் 3-வது செட்டை 6-3 என்ற கணக்கிலும் வீழ்த்தினார். இதனால் 6-4, 9-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கீஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா டிமிட்ரிவ்னா சாம்சோனோவா இத்தாலி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இதில் முதல் செட்டை 6-3 என கோகோ காப் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிண்டா 6-3, 6-4 என அடுத்த இரு செட்களை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, ரிபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவுடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரிபாகினா 6-4 என வென்றார். இதையடுத்து சுதாரித்துக் கொன சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சபலென்கா, ரிபாகினா இறுதிக்கு முன்னேறினர்.
    • நேற்று நடந்த அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முதல் ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ரிபாகினா இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோத உள்ளார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
    • இதில் பெலாரசின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஸ்பெயின்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, நம்பர் 1 வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
    • சபலெங்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான அரினா சபலென்கா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    சபலென்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

    • இன்று ந்டந்த அரையிறுதி போட்டிகளில் சபலென்கா, கோகோ காப் வென்றனர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, கோகோ காப் மோதுகின்றனர்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொண்டார்

    இதில் 0-6 என முதல் செட்டை இழந்த சபலென்கா, அடுத்த இரு செட்களில் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு அரையிறுதியில், அமெரிக்காவின் கோகா காப், கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோகா காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா, கோகோ காப் மோதுகின்றனர்.

    ×