என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆழ்வார் திருமஞ்சனம்"
- வருகிற 16-ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது.
- தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருமலை:
திருச்சானூர் பத்மாவதி கோவிலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரதசப்தமி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 8.45 முதல் 9.45 மணி வரை ஹம்ச வாகனத்திலும், 10.15 முதல் 11.15 மணி வரை அஸ்வ வாகனத்திலும், 11.45 முதல் 12.45 வரை கருட வாகனம், மதியம் 1.15 மணி முதல் 2.15 மணி வரை சின்னசேஷ வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திரபிரபை வாகனம், இரவு 8.30 முதல் 9.30 மணி வரை கஜ வாகனத்திலும் சாமி மாட வீதியில் உலா நடக்கிறது.
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலின் கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் உள்ள தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இதையொட்டி, பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறும் அபிஷேகம், லட்சுமி பூஜை, ஆர்ஜித கல்யாணோற்சவம், குங்கும அர்ச்சனை, பிரேக் தரிசனம், ஊஞ்சல்சேவை, வேதாசிர்வச்சனம் ஆகிய சேவைகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
மேலும் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலுடன் இணைந்த ஸ்ரீசூர்யநாராயண சுவாமி கோவிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அஸ்வ வாகனத்தில் பக்தர்களுக்கு சாமி காட்சியளிக்கிறார்.
ரத சப்தமியை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
அதன்படி காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.
அதன்பின்னர் நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலிக்கட்டை மற்றும் இதர வாசனை திரவியங்களின் புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நேற்று கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஸ்வர்ணகுமாரி வழங்கிய திரைச்சீலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
- 14-ந்தேதி நடைபெறும் கஜவாகன சேவைக்கு அதிக பக்தர்கள் வருகை.
- பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள்.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைவர் பூமண. கருணாகர் ரெட்டி கலந்துகொண்டார்.
பத்மாவதி தாயார் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நாளை (வியாழக்கிழமை) அங்குரார்பணம் நடக்கிறது. 14-ந்தேதி நடைபெறும் கஜவாகன சேவைக்கு அதிக பக்தர்கள் வருகை தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
18-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ரூ.9 கோடி செலவில் புஷ்கரணி நவீனமயமாக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை நீரால் சுத்தம் செய்த பின்னர், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐதராபாத்தை சேர்ந்த சுவர்ண குமார் ரெட்டி 11 திரைச்சீலைகளும், குண்டூரை சேர்ந்த அருண்குமார், பத்மாவதி, திருச்சானூரை சேர்ந்த பவித்ரா மற்றும் ரஜினி ஆகியோர் 4 திரைச்சீலைகளும் வழங்கினர்.
- பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம்.
- 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 18-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் பூமண கருணாகர் ரெட்டி கூறியதாவது:-
ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியை அர்ச்சகர்கள் செய்தனர். ஆனந்த நிலையம் முதல் தங்கவாசல் வரை, கோவிலுக்குள் உள்ள உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது சுவாமியின் மூலவிரட்டு முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்தது.
சுத்திகரிப்புக்கு பிறகு, நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டா உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதையடுத்து, அர்ச்சகர்கள் சுவாமியின் மூலவிரட்டை மூடியிருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கினர்.
ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் 11 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது. பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 17-ந் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
- பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
இதையொட்டி ஏழுமலையான் கோவில் முழுவதும் தூய்மைப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் பணி இன்று காலை நடந்தது.
தெலுங்கு வருட பிறப்பு ஆனிவார ஆஸ்தானம் வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய 4 நாட்களுக்கு மட்டும் கோவில் முழுவதும் பரிமளம் என்ற வாசனை திரவியம் மூலம் கோவில் கருவறை கொடிமரம் மற்றும் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்படுகிறது.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை சுமார் 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருந்தனர்.
- திருமஞ்சனம் நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும்.
- ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன்படி வருகிற 11-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக காலை 6 மணிக்கு தொடங்கும் திருமஞ்சனம் நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். திருமஞ்சன நிகழ்ச்சி முடிந்ததும் சுவாமி மூலவிரட்டுக்கான பூஜை நிகழ்ச்சிகளை கோவில் அர்ச்சகர்கள் செய்வார்கள்.
அதன்பின், பகல் 12 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- நாளை முதல் 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது.
- 26-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது. அதை முன்னிட்டு நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதையொட்டி அதிகாலை சுப்ர பாதத்தில் மூலவரை துயிலெழுப்பி தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் நடந்தது. காலை 6 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தூய தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.
அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரனம், கஸ்தூரி மஞ்சள், பச்சகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற நறுமண பொருட்கள் அடங்கிய திரவியத்தை கோவில் முழுவதும் தெளித்தனர். மதியம் 12.30 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
உற்சவத்தின் ஒரு பகுதியாக நாளை இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அனுமந்த வாகன வீதிஉலா, 26-ந்தேதி கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியைச் சேர்ந்த பக்தர் நரசிம்மன் என்பவர் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான திரைசீலையை காணிக்கையாக வழங்கினார்.
- 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது.
- அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது. அதையொட்டி 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
அன்று அதிகாலை கோவிலில் மூலவர்களுக்கு பூஜைகள் முடிந்ததும் மூலவர் சன்னதியில் இருந்து நுழைவு வாயில் வரை அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
அதன் பிறகு மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
- 31-ந்தேதி முதல் ஜூன் 8-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
திருப்பதி அருகே அப்பாலயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 8-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலையில் சுவாமி எழுந்தருளி தோமாலசேவை, கொலு, பஞ்சாங்கஸ்ரவணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 8 மணி முதல் 10.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்திகரிக்கப்பட்டன. அதன்பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டி போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
அதன்பின்னர் 11.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
- பிரம்மோற்சவ விழா 31-ந்தேதி தொடங்கி ஜூன் 8-ந்தேதி வரை நடக்கிறது.
- கருவறை முதல் அனைத்துச் சன்னதிகளும் வாசனை கலவையால் சுத்தம் செய்யப்படும்.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி மாவட்டம் நாராயணவனத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி வரை நடக்கிறது.
அதை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி 24-ந்தேதி நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள மூலவர் கருவறை முதல் அனைத்துச் சன்னதிகளும் பரிமளம் என்ற வாசனை கலவையால் சுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாசனை பொருட்கள் அடங்கிய திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
- திருப்பதியைச் சேர்ந்த பக்தர் கோவிலுக்கு 3 திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை தங்க விமான கோபுரம் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
கோவில் மூலவர் சன்னதி, கோவில் வளாகத்தில் உள்ள இதர சன்னதிகள், சுவர்கள், மேற்கூரைகள், பூஜை பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரிமஞ்சள், பச்சைகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டி போன்ற வாசனை பொருட்கள் அடங்கிய திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியைச் சேர்ந்த பக்தரும், காணிக்கையாளருமான மணி என்பவர் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலுக்கு 3 திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினார். அந்தத் திரைச்சீலைகளை கோவில் உதவி அதிகாரி ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வாசனை பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.
- புதன்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதில் கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
அதன் பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலி கட்டை ஆகிய வாசனை பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.
இதையடுத்து காலை 9 மணியில் இருந்து பக்தர்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடக்கிறது.
- 8-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
- 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மே மாதம் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி கருட சேவை, 11-ந்தேதி தேரோட்டம் மற்றும் கல்யாணோற்சவம் நடக்கிறது.
அதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். ஒரு டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நிறைவாக 12-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.
அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய வளாக தூய்மைப் பணி மே 2-ந்தேதி நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்