என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலைப்போட்டிகள்"
- போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
- தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம்
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு, கலைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவர்களிடையே மறைந்து கிடக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும், 5-8, 9-12, 13-16 வயதுப் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் முதல் பரிசு பெற்றவர்களிடையே 9-12, 13-16 மாநில அளவில் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.
சென்னை மாவட்ட அளவில் 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சிறுவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
அவ்வகையில், முதற்கட்டமாக 5-8, 9-12, 13-16 என்ற மூன்று வயது வகைப் பிரிவில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வருகிற 12-ந்தேதி பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் குரலிசை ஆகிய கலைப் போட்டிகளும் மற்றும் 13-ந்தேதி ஓவிய கலைப் போட்டியும் நடைபெற உள்ளன.
கலைப் போட்டிகள் அனைத்தும் சென்னை-28, ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளன.
போட்டிகளில் கலந்து கொள்ளும், மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் பிறப்பு சான்றிதழ் கொண்டு வரவேண்டும். பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய கலை போட்டிகள் 5-8, 9-12 வயது பிரிவு மாணவ, மாணவியருக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், 13-16 வயது வகை மாணவ, மாணவியருக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைெபறும். ஓவியப் போட்டிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெறும்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
இப்போட்டிகளுக்கான விதிமுறைகள் விவரம் வருமாறு:-
பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள் , பென் டிரைவ் ஆகியவற்றினை பயன படுத்திக் கொள்ளலாம்.
இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. குறுந்தகடுகள், பென் டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
கர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படும்.
40x30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன் படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், ஆயில் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டுவருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். வயது விவரம் 1.6.2023 அன்று உள்ளபடி 16 வயது இருக்க வேண்டும். 5 முதல் 8 வயது பிரிவு உள்ளவர்கள் 1.6.2015 முதல் 31.5.2018 வரை பிறந்தவர்களாகவும், 9 முதல் 12 வயது பிரிவு உள்ளவர்கள் 1.6.2011 முதல் 31.5.2015 வரை பிறந்தவர்களாகவும் 13 முதல் 16 வயது பிரிவு உள்ளவர்கள் 1.6.2007 முதல் 31.5.2011 வரை பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 044-28192152 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளிகள் இடையிலான கலைப்போட்டிகள் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
- மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மதுரை மாவட்ட பள்ளிகள் இடையே நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வருகிற 30-ந்தேதி உலக தமிழ்ச் சங்க கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் பள்ளி யின் தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் மதுரை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவர்.
போட்டி களுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சுசீலா செய்து வருகிறார்.
இந்த தகவல் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சசூரி நிறுவனங்களுக்கு இடையேயான மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் நடைபெற்றது.
- மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சசூரி நிறுவனங்கள் மற்றும் அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் சிரிஸ்டா-2023 கலைப்போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலைப்போட்டிகள், இரண்டாம் நாள் கல்லூரிக்கு இடையேயான மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் மற்றும் மூன்றாம் நாள் சசூரி நிறுவனங்களுக்கு இடையேயான மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சசூரி நிறுவனத்தின் தாளாளர் கந்தசுவாமி தலைமை தாங்கினார்.கல்லூரியின் செயலாளர் சவிதா மோகன்ராஜ் விழாவை தொடங்கி வைத்தார் . சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் தர்ஷன், மணிமேகலை, நடிகை காயத்ரி சங்கர், ஸ்ருதிகா, அருண் அரவிந்த் மற்றும் விஜய் விருஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் குழுநடனம் , தனிநபர் நடனம்,மௌனப்படம், புகைப்படம் எடுத்தல், காய்கறி செதுக்குதல், நகக்கலை, குறும்படம், மெஹந்தி உள்பட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தங்கள் பன்முகத்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கப்பட்டது. முடிவில் நைருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அன்பரசு நன்றி கூறினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.
- சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார்.
- இதில் மாணவர்கள் தங்கள் பன்முக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சசூரி நிறுவனங்கள் மற்றும் அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் சிரிஸ்டா-2023 நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முதல் நாளாக பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சசூரி நிறுவனத்தின் தாளாளர் கந்தசுவாமி தலைமை தாங்கினார். செயலாளர் சவிதா மோகன்ராஜ் விழாவினை துவக்கி வைத்தார். சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார்.
நைருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அன்பரசு வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) சிவானந்தம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பல்வேறு பள்ளிகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
குழு நடனம், தனிநபர் நடனம், மௌனப்படம், ரங்கோலி, கழிவுகளிலிருந்து கைவினை பொருட்கள் தயாரித்தல் மெஹந்தி, கையெழுத்து போட்டி, சுவரொட்டி தயாரித்தல், அறிவியல் கண்காட்சி, குறும்படம், வண்ணம் தீட்டுதல், காய்கறிகள் செதுக்குதல், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, புகைப்படம் எடுத்தல், நகக்கலை போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்கள் பன்முக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
- பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
- கிரேடு முறையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப் பட உள்ளது
திருப்பூர் :
திருப்பூர் சசூரி கல்வி நிறுவனங்கள் மற்றும் அடையார் புற்றுநோய் நிறுவனம் சார்பில் சிரிஸ்டா-2023 விழா நாளை 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
குரூப் டான்ஸ், சோலோ டான்ஸ், மிமீ, மெகந்தி ஆர்ட், நெய்ல் ஆர்ட், ரங்கோலி, வெஜிடபிள், புரூட் கார்விங், கிராப்ட், ஹேண்ட் ரைட்டிங், பெயிண்டிங், போட்டோ கிராபி, போஸ்டர் மேக்கிங், ஸ்பெல் பீ, சயின்ஸ் எக்ஸ்போ, லிட்டில் செப், திருக்குறள், செஸ், யோகா, சிலம்பம், கராத்தே, வாலிபால், கபடி, கிரிக்கெட்,பாஸ்கட் பால், குறும்படம் , பேஸ் பெயிண்டிங் என பல்வேறு விதவிதமான போட்டிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 6 முதல் 8-ம்வகுப்பு வரை, 9 முதல் 12-ம்வகுப்பு வரை என்ற கிரேடு முறையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
- சிவகங்கை செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் குழந்தைகளுக்கான கலை போட்டிகள் நடந்தது.
- பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
காரைக்குடி
காரைக்குடி செல்ல ப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி மற்றும் காரைக்குடி சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து, 2 முதல் 6 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தியது.
பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மொத்தம் 72 வகையான பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்ட கவர்னர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் ராணி போஜன் வரவேற்றார். பள்ளியின் கல்வி அதிகாரி டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் கேபினட் செயலாளர் பாதம் பிரியன், மாவட்ட லியோ தலைவர் மதிவாணன், மண்டலத்தலைவர் முத்துகுமார், ஜோன் தலைவர் முத்துகண்ணன், பொருளாளர் லட்சுமணன், செயலா ளர் பழனிவேல், பிரெ சிடெண்ட் சண்முகசு ந்தரம், லியோ செயலாளர் தீப்ஷா, ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் வருகிற 17-ந் தேதி இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடக்கிறது.
- வருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை
மதுரை நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மதுரை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இளையோர் திருவிழா, அய்யர்பங்களா, நாகனாகுளத்தில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஓவியப் போட்டி, இளம் எழுத்தாள ருக்கான கவிதைபோட்டி, புகைப்படம் எடுத்தல் போட்டி, இந்தியா @ 2047 என்ற தலைப்பில் ஆங்கில பேச்சுப் போட்டி, நாட்டுப்புற கிராமிய இசையுடன் கூடிய வீதி நாடகம், இந்தியா @ 2047 இளையோர் கருத்தரங்கம் ஆகியவை நடக்கிறது.
இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது முதல் 20 வயது வரையான மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். இளையோருக்கான போட்டிகளில் 15 வயது முதல் 29 வயது வரையானவர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 3 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர முதல்,2-ம் நிலை வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து துணை இயக்குநர், நேரு யுவ கேந்திரா, ஆசாத் தெரு, காந்தி நகர் என்ற முகவரியில் வருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்