search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடித்தல்"

    • ஐஸ் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்படும் மீன்களை விட கிராமத்து குளங்களில் அவ்வப்போது மீன்களை பிடித்து சமைப்பது கூடுதல் சுவை தருவதாகும்.
    • பால் (பந்து) தூண்டில்கள் எனப்படும் இந்தவகை தூண்டில்களில் மீன்களுக்கு உணவாக சத்துமாவு, கோதுமைமாவு மற்றும் முட்டை கலந்த கலவையை பயன்படுத்துகிறோம்.

     குடிமங்கலம்:

    குடிமங்கலத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதி இளைஞர்கள் பயனுள்ள பொழுதுபோக்காக மீன்பிடித்து வருகின்றனர்.

    அவர்கள் கைத்தூண்டில், நிலத் தூண்டில், வலை என பல விதங்களில் மீன்களைப்பிடித்து வருகிறார்கள். அதேநேரத்தில் மாவு உருண்டை தூண்டில் மூலம் நூதன முறையில் மீன் பிடிப்பது ரசிக்க வைப்பதாக உள்ளது.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    ஐஸ் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்படும் மீன்களை விட கிராமத்து குளங்களில் அவ்வப்போது மீன்களை பிடித்து சமைப்பது கூடுதல் சுவை தருவதாகும். ஆனால் பெரும்பாலான கிராமத்து குளங்களில் மீன் பிடிக்கும் உரிமை ஏலம் விடப்படுவதால் குத்தகைதாரர்கள் தவிர மற்றவர்களை மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை. ஒருசில சிறிய குளங்கள் மட்டுமே ஏலம் விடப்படாமல் உள்ளது. அந்த குளங்களில் மட்டுமே மீன் பிடிக்க முடிகிறது.

    பொதுவாக தூண்டில்களில் மீன்களுக்கு இரையாக மண் புழுக்களை பயன்படுத்துவது வழக்கமாகும். ஆனால் சமீப காலங்களாக ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் விளைநிலங்களில் மண் புழுக்களைப் பார்ப்பதே அரிதான விஷயமாக உள்ளது. அதனால் தூண்டில்களில் மீன்களுக்கு இரையாக கறிக்கடையிலிருந்து கோழி குடல்களை வாங்கி வந்து பயன்படுத்துகிறோம். இதுதவிர மாவு உருண்டை தூண்டில்களை பயன்படுத்தி விரைவாக மீன்களை பிடிக்க முடிகிறது. பால் (பந்து) தூண்டில்கள் எனப்படும் இந்தவகை தூண்டில்களில் மீன்களுக்கு உணவாக சத்துமாவு, கோதுமைமாவு மற்றும் முட்டை கலந்த கலவையை பயன்படுத்துகிறோம். ஒரு ஸ்பிரிங்கை சுற்றி மாவை உருண்டையாக வைத்து அதனுள் தூண்டில்களை புதைத்து வைக்கிறோம்.

    மேலும் மாவு உருண்டை தூண்டில் நீருக்குள் மூழ்குவதற்காக ஒரு இரும்பு நட்டு அதற்கு மேலே சற்று இடைவெளியில் பிளாஸ்டிக் பந்து இணைத்து இந்த தூண்டிலை தயாரிக்கிறோம். இந்த தூண்டிலை கயிற்றுடன் இணைத்து ஒரு முனையை பிடித்துக்கொண்டு தூண்டிலை தண்ணீருக்குள் வீசி விட்டு காத்திருந்தால் மாவைத் தின்னும் மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும். இந்த முறையில் மீன்கள் அதிக அளவில் சிக்குகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பணம் அரசு கணக்கில் சேர்ப்பு
    • தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் குளச்சல் அரபிக்கடல் பகுதிக்கு வரும் கர்நாடகா விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசால் கடலில் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட 'சாவாளை' மீன்களை சட்ட விரோதமாக பிடித்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குளச்சல் அரபிக்கடல் பகுதியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளில் வந்த 29 மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்து வருவதாக குளச்சல் மீன்பிடி துறைமுக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் உதவியுடன் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த கர்நாடகாவை சேர்ந்த 3 விசைப்படகுகளை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் 3 விசைப்படகுகளில் இருந்த கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த 29 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக, தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான சாவாளை மீன்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அமிர்தேஸ்வரி, அமிர்தா னந்தா, அஜனா ஆகிய மூன்று விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீன்களையும் அதிகளவில் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அமிர்தேஸ் வரி படகின் உரிமையாளர் சச்சின், அமிர்தானந்தா படகின் உரிமையாளர் நாகம்மா, அஜனா படகின் உரிமையாளர் அசரப் ஆகியோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து பறி முதல் செய்யப்பட்ட மீன்கள் நேற்று குளச்சல் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டு ஏலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ரூ.10 லட்சத்திற்கும் மேல் இந்த சாவாளை மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.இந்த மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்க பயன்படுவதால் மீன் எண்ணை நிறுவனத்தினர் இதனை வாங்கி சென்றனர்.இந்த சாவாளை விற்பனை செய்யப்பட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, காரைக்காலில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்து சென்றனர்.

    புதுச்சேரி: 

    காரைக்கால் அருகே கீழ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் (வயது28). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் காரை க்கால் மீன்பிடி துறைமு கத்திலிருந்து, கீழ காசாகுடி மேடு பகுதியை சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை, கடலில் நிலவும் தட்ப வெட்ப நிலைக்கு எதிர் மாறாக, இந்திய எல்லை யில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இலங்கைக்கு உட்பட்ட முல்லை தீவு அருகே சென்றதால், அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கீழகாசாக்குடி மேடு மீனவர்களின் விசை ப்படகை சுற்றி வளைத்தது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 12 மீனவர்க ளையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்து சென்றனர். இச்செய்தி கீழக்காசாக்குடி மேட்டை சேர்ந்த கிராம த்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×