என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரவிசங்கர் பிரசாத்"
- வாக்குறுதிகளை வெளியிடுவதில் ராகுல் காந்தி வல்லவர்.
- மக்களை தவறாக வழிநடத்தியதை காங்கிரஸ் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்றும், மீறினால் திவால் நிலை ஏற்படும் என்றும், மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இதன் மூலம், மக்களை தவறாக வழிநடத்தியதை காங்கிரஸ் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
கர்நாடகாவில் அமலில் உள்ள பெண்களுக்கான இலவச பேருந்துப் பயண திட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து அம்மாநில காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இமாச்சலப் பிரதேச அரசு சம்பளத்தை வங்கியில் இருந்து எடுக்க வேண்டாம் என அரசு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடந்ததற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மராட்டிய காங்கிரஸுக்கு கூறிய பாடத்தை, மல்லிகார்ஜுன் கார்கே ராகுல் காந்திக்கு கற்பிப்பாரா? வாக்குறுதிகளை வெளியிடுவதில் ராகுல் காந்தி வல்லவர். வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களை முட்டாளாக்கக் கூடியவர்" என்றார்.
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மும்பையில் நிறைவடைந்தது.
- அப்போது பேசிய அவர், நாங்கள் சக்தியை எதிர்த்து போராடுகிறோம் என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மும்பையில் நிறைவடைந்தது.
அப்போது பேசிய ராகுல் காந்தி, நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி வாக்குப்பதிவு இயந்திரம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வசம் உள்ளது என பேசினார்.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி நேற்று இந்து கலாசாரத்தை அவமதித்தார். அவர் தன் தவறை உணர்ந்து கொள்வார் என நினைத்தோம்.
ஒருநாள் ஆன பிறகும் அந்த அறிக்கையை சரிசெய்யும் முயற்சிகள் இல்லை. கூட்டணி கட்சியினர் அவரது கருத்துக்கு அர்த்தத்தைத் தேடி, அதை நியாயப்படுத்த முயல்கின்றனர்.
ராகுல் காந்தியின் கீழ் உள்ள காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியாக இல்லை.
பிரிவினை மனப்பான்மையும், மாவோயிஸ்ட் சிந்தனையும், இந்து விரோத சிந்தனையும் கொண்ட காங்கிரஸ் கட்சி இது. ராகுல் காந்தி இந்தக் கூறுகளின் ஆதிக்கத்தில் முழுமையாக இருக்கிறார்.
பிற மத எண்ணங்கள் அல்லது கடவுள்களின் நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து அதே இழிவான வார்த்தைகளில் பேச உங்களுக்கு தைரியம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
- உ.பி.யில் இளைஞர்கள் எப்போதும் போதையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
- ராகுல் காந்தியின் இந்தக் கூற்றுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தியின் நடைபயண யாத்திரை தற்போது, உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
அமேதியில் நேற்று நடந்த யாத்திரையில் அவர் பேசுகையில், வாரணாசிக்கு சென்றபோது இரவில் வாத்தியங்கள் முழங்குவதை பார்த்தேன். உ.பி.,யில் மாணவர்கள் போதையில் சாலையில் கிடந்ததைப் பார்த்தேன். உத்தர பிரதேச மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? ராமர் கோவிலில் பிரதமர் மோடியும், அம்பானியும், அதானியும் இருக்கின்றனர். ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் நபரைக்கூட பார்க்கமுடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், இது மிகவும் வேதனையானது. ராகுல் எப்போது கற்றுக் கொள்வார்? உ.பி.யில் இளைஞர்கள் எப்போதும் போதையில் இருக்கிறார்கள் என்று அவர் எப்படி கூறினார்? மக்களை இழிவுபடுத்துவதை நான் கண்டிக்கிறேன். சந்தேஷ்காலி கிராமத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இன்னும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர் என குறிப்பிட்டார்.
- நாடு பிரிவினை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சுரேஷ்குமார் கருத்து தெரிவித்தார்.
- பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய அவரது கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ்குமார் இடைக்கால பட்ஜெட் குறித்துப் பேசினார். அப்போது, ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெறவேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனில், இந்தி மொழி பேசும் பகுதியினர் நம் மீது திணித்துள்ள சூழ்நிலை காரணமாக தனிநாடு கோரிக்கையை முன்வைக்க நேரிடும் என தெரிவித்தார்.
அவரது கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாட்டை பிளவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் அதனைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் அனைவரும் ஒரே நாடாக இருக்கிறோம். அப்படியே இருப்போம் என உறுதியுடன் கூறுகிறேன் என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யின் கருத்து தொடர்பாக பா.ஜ.க.வின் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
டி.கே.சுரேஷ்குமாருக்கு இனியும் எம்.பி.யாக நீடிக்க தகுதி கிடையாது.
ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் போது அவரது கட்சி எம்.பி. நாடு பிரிவினைப் பற்றி பேசுகிறார்.
இந்த விவகாரத்தில் சோனியா மவுனமாக இருப்பது துரதிர்ஷ்டம்.
அரசியல் சாசனத்தை நாங்கள் மீறுவதாக தினமும் எங்களை குற்றம்சாட்டும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது எம்.பி.யின் கருத்து குறித்து மவுனம் காக்கின்றனர்.
அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த கருத்து குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் மவுனம் காக்கின்றனர் என கூறினார்.
- மோடி ஆட்சி காலத்தில் எல்லை உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தியாவின் நிலம் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சீனாவால் பறிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவுற்றுள்ள தருணத்தில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
இந்தியாவின் நிலம் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சீனாவால் பறிக்கப்பட்டது. கிழக்கு லடாக்கில் அண்டை நாட்டுடன் மோதல் வெடித்தபோது நாடு தைரியத்தை காட்டியது.
மோடி ஆட்சி காலத்தில் எல்லை உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே மோசமான நிலையில் வைத்திருந்தது.
அவர்கள் (காங்கிரசார்) மோடி மீதான வெறுப்புக்கு வெளியே வர வேண்டும். காங்கிரஸ் கட்சி மிக மோசமாக கடந்த 2 பொதுத்தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டது.
கொரோனா தொற்று மோசமாக நிர்வகிக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுவது வெட்கக்கேடானது. இந்தியா அந்த தொற்றை நிர்வகித்த விதத்தை ஒட்டுமொத்த உலகமே அங்கீகரித்துள்ளது.
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டன. காங்கிரஸ் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அரசை விமர்சியுங்கள். நாட்டின் முடிவை ஏன் பலவீனப்படுத்துகிறீர்கள்? காங்கிரசாரின் விமர்சனம், சுகாதார பணியாளர்களையும், நாட்டை பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றியவர்களையும் அவமதிப்பதாகும்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.80 லட்சம் கோடி). பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது அது 3½ டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.280 லட்சம் கோடி). நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.50 லட்சம் கோடிக்கும் அதிகம்.
சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதம். உற்பத்தி துறையில் இந்தியா 99 சதவீத செல்போன் தேவையை சந்திக்கிறது. 2014-ம் ஆண்டு இதில் 78 சதவீதம் இறக்குமதிதான் செய்யப்பட்டது.
விவசாய உற்பத்தி பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.
ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.87 லட்சம் கோடி ஆகும். 312 திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு ரூ.6.68 லட்சம் கோடி வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்களுக்கு போகிற ரூ.2.70 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிகள் எழுப்பி உள்ள கேள்விகள், பொய் மூட்டை ஏமாற்ற மலை. 9 கேள்விகளும் விமர்சனத்தின் அடிப்படையில் எழவில்லை. அவை மோடி மீதான நோய் இயல் வெறுப்பினால் எழுந்தவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் மன்னிப்பு கேட்பாரா? என்று நீதிமன்றம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.
- தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவர்கள் ஏன் உயர் நீதிமன்றத்திற்கோ, உச்ச நீதிமன்றத்திற்கோ செல்லவில்லை?
புதுடெல்லி:
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறிய ராகுல் காந்தி, தன்னை சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டேன் என பேட்டி அளித்தார். மேலும், பிரதமர் மோடி, தொழில் அதிபர் அதானி இடையேயான தொடர்புகள், அதானி குழுமம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டதாகவும், அவ்வாறு பேசியதன் எதிரொலியை உணருவதாகவும் கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
2019ல் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. பிரச்சினையை திசைதிருப்ப முயற்சிக்கிறார்.
தாழ்த்தப்பட்ட சமூக மக்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார். அப்படி பேசுவதற்கு அவருக்கு உரிமை இருந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தை அணுகவும் உரிமை இருக்கிறது. அவர் மன்னிப்பு கேட்பாரா? என்று நீதிமன்றம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார்.
ராகுல் காந்தி வேண்டுமென்றே ஓபிசி பிரிவினரை அவமதித்துள்ளார். அதை பாஜக கண்டிக்கிறது. அவருக்கு எதிராக பாஜக தீவிர போராட்டம் நடத்தும்.
தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவர்கள் ஏன் உயர் நீதிமன்றத்திற்கோ, உச்ச நீதிமன்றத்திற்கோ செல்லவில்லை? தங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவின் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இடைக்கால தடை வாங்கினார்கள். ராகுல் காந்தியின் வழக்கில் வழக்கறிஞர்கள் ஏன் மவுனமாக இருந்தனர்? இது, ராகுல் காந்தி தன் பதவியை தியாகம் செய்ததுபோன்று காட்டி, அதன்மூலம் கர்நாடக தேர்தலில் பயனடைவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட யுக்தி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல்காந்தி, சோனியாகாந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் ஜாமீனில் உள்ளனர்.
- அதானியின் சொத்துகள் அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி :
பாராளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகள் அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டினார். அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது. பாராளுமன்றத்துக்கு வெளியே பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் மீது அடிப்படையற்ற, வெட்கக்கேடான, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி தெரிவித்து வருகிறார். நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்திய மிகப்பெரிய ஊழல்கள் அனைத்திலும் காங்கிரஸ் தலைவர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். எனவே, ராகுல்காந்தி, ஊழல் குறித்த தனது நினைவுத்திறனை தட்டி எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. ராகுல்காந்தி, அவருடைய தாய் சோனியாகாந்தி, மைத்துனர் ராபர்ட் வதேரா ஆகியோர் ஜாமீனில் உள்ளனர்.
ஊழல் செய்வதும், ஊழல்வாதிகளை பாதுகாப்பதும்தான் ராகுல்காந்தி மற்றும் அவரது குடும்பத்தின் சரித்திரம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தெலுங்கானா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.
- பிரச்சாரத்திற்கு வராததற்கு தெளிவான காரணம், பொறுப்பை ஏற்காமல் இருப்பதுதான்.
சிம்லா:
இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளதாவது:
ராகுல் காந்தியை எங்கே, காணவில்லை? அவர் பாதயாத்திரையில் இருக்கிறார், ஆனால் இமாச்சல மாநிலம் குறித்து ஏன் இவ்வளவு அலட்சியம். காங்கிரசின் திறமையான தலைமை ஏன் இமாச்சல் (தேர்தல்) மீது இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது
தேர்தல் பிரச்சாரம் ஓரிரு நாட்களில் முடிவடையும், ஆனால் ராகுலையும் அவரது தாயாரையும் (சோனியா காந்தி) இங்கு காணவில்லை. தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் ராகுல்காந்தி இருக்கிறார். அதனால் இங்கு வராமல் தவிர்க்கிறார்.
ராகுல் காந்தி ஏன் இமாச்சலில் பிரச்சாரம் செய்யவில்லை என நாங்கள் கேட்க விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சி தோல்வியை கண்டு பயப்படுகிறதா? அதற்கு காரணங்கள் உள்ளன, ஆறு மாநிலங்களில் ஏழு சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது, பாஜக 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை, மேலும் டெபாசிட்டையும் இழந்துள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை மகாராஷ்டிராவிற்குள் நுழையும் போது தெலுங்கானா இடைத்தேர்தலில் (முனுகோட் தொகுதி) காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழக்கிறார்.
எனவே, ராகுல் காந்தி இமாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்திற்கு வராததற்கு தெளிவான காரணம், பொறுப்பை ஏற்காமல் இருப்பதுதான். வெற்றியும் தோல்வியும் தேர்தலின் ஒரு பகுதி. ஆனால் அரசியல் செயல்முறையின் ஒரு பகுதியான (தேர்தலில்) மக்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் விலகி இருப்பார்கள்.
இது என்ன வகையான அரசியல்?. ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் இங்கு வர மாட்டார்கள் என்று நான் தெளிவாக நம்புகிறேன், ஏனெனில் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார்.
- தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது
புதுடெல்லி :
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, வேலை வழங்க நிலம் லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மூத்த மகள் மிசார பாரதி எம்.பி. உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ''அந்த வழக்கில் எதுவுமே வெளிவரவில்லை. நான் இப்போது அவருடன் கூட்டணியில் இருக்கிறேன். சி.பி.ஐ. தங்கள் ஆசைக்கேற்ப செயல்படுகிறது'' என்று கூறினார்.
இந்தநிலையில், நிதிஷ்குமாருக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நிதிஷ்குமார், தான் வாழ்நாளில் கட்டிக்காப்பாற்றிய முக்கிய கொள்கைகளை லாலுவையும், அவரது குடும்பத்தையும் ஊழல் வழக்கில் ஆதரித்து பேசுவதன் மூலம் சமரசம் செய்து கொண்டு விட்டார்.
2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார். ஆனால் அவரே தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது, துரதிருஷ்டவசமானது.
அவர் சட்டத்தை செயல்பட விட வேண்டும். அதில் குறுக்கிடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இந்தியா பிளவுபட்டது. அதனால் பலன் இல்லை.
- தற்போது இந்தியா இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்று பட்டுள்ளது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல்காந்தி முதல் நாளே, மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் நடத்த விரும்பினால் பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்று தாம் பரிந்துரைப்பதாக பாஜக மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இந்தியா பிளவுபட்டது. அதனால் எந்த பலனும் இல்லை. தற்போது இந்தியா இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்றுபட்டுள்ளது. இதனால் (இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்கும் வகையில்) இந்திய ஒற்றுமை பயணத்தை பாகிஸ்தானில் நடத்துங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை குடும்பத்தைக் காப்பாற்றும் பிரச்சாரம் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது குடும்பம் மற்றும் கட்சியின் நிலை ஆட்டம் காண்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்குள் புகுந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது ஆதாரங்களை கேட்டு, நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்திய ராகுல்காந்தி, தற்போது நாட்டை ஒற்றுமைப் படுத்த பயணம் தொடங்குவது எவ்வளவு போலித்தனமானது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்