என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "காட்டாற்று வெள்ளத்தை கடந்து வரும் கிராம மக்கள்"
- தொடர் மழை காரணமாக வண்ணார் மடுவு ஆற்றில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
- ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி ஊராட்சிக்கு உட்பட்ட குஜ்ஜிவகுத்தான் கொட்டாய், பாகிமானூர் கொள்ளகொட்டாய், இருளர் காலனி, வாத்தியார் கொட்டாய் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாணவ மாணவிகள் தங்களது அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கு தங்கள் கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து சென்று ஜிட்டோபாளபள்ளி கிராமத்தின் வழியாக கிருஷ்ணகிரி, மத்தூர், ஜெகதேவி போன்ற பகுதிகளுக்கு வேலைக்காக வும் மாணவ மாணவிகள் கல்வி கற்கவும் செல்கி றார்கள்.
இந்த ஒன்றரை கிலோ மீட்டர் நடை பயணத்தில் இடையே வண்ணார் மடுவு ஆறு ஒடுகிறது இதனை இப்பகுதி பொதுமக்கள் கடந்த சென்று வருகின்றனர். இப்படி பல தலைமுறையாக சென்று வரும் இந்த மக்களுக்கு மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் சென்று வர பாதை இல்லாமல் ஏழு கிலோமீட்டர் சுற்றி பாகிமானூர், சாப்பனமூட்லு, வழியாக சுற்றி செல்கின்றனர்.
இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுவதாகவும் இதனைப் போக்க ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வண்ணார் மடுவு ஆற்றில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதனால் ஏழு கிலோமீட்டர் சுற்றி செல்ல முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் 2 அடி உயரத்தில் முழங்கால் அளவு ஒடும் வெள்ளத்தை கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு தங்களது அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளுக்காகவும் கல்வி கற்கவும் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
அந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அல்லது உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.