என் மலர்
நீங்கள் தேடியது "ஹைஜீன் ரேட்டிங்"
- திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஹைஜீன் ரேட்டிங் என்னும் உணவு சுகாதார சான்றிதழ் 226 உணவக ங்களுக்கு வழங்கப்பட்டு ள்ளது.
- தமிழகத்திலேயே இது வரை திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிக ஓட்டல் மற்றும் பேக்கரிகள் இந்த சான்று பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஹைஜீன் ரேட்டிங் என்னும் உணவு சுகாதார சான்றிதழ் 226 உணவக ங்களுக்கு வழங்கப்பட்டு ள்ளது.
வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உணவு பாது காப்பு தர ஆணையம் ஓட்டல் மற்றும் பேக்கரி களுக்கு ஹைஜீன் ரேட்டிங் என்ற பெயரில் உணவு சுகாதார சான்று வழங்கி வருகிறது.
கலப்படமில்லாத தர மான மூலப்பொருட்களை மட்டுமே உணவு தயாரிப்பில் பயன்படுத்த வேண்டும். உணவு தயாரிப்பவர் நோய் பாதிக்காதவராக இருக்க வேண்டும். வாடிக்கை யாளர்களுக்கு பரிமாறும் போது தலை, கையுறை அணிய வேண்டும். கழிப்பறை, கை கழுவும் வசதிகள் சுகாதாரமாக ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது.
பழைய உணவை சூடுபடுத்தி பரிமாறக் கூடாது. ஓட்டல் மற்றும் உணவகத்தில் உணவு பாதுகாப்பு கண்காணி ப்பாளரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் குழுவினர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திண்டுக்கல் நகரில் 60 ஓட்டல் மற்றும் பேக்கரி களுக்கும், மாவட்டம் முழுவதும் 220 ஓட்டல்களு க்கும் ஹைஜீன் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவராம பாண்டியன் மேலும் தெரிவிக்கையில், ஓட்டல்களில் தூய்மையான சூழல், உணவு தயாரிக்கும் இடம், குடிநீர் மற்றும் கழிப்பறை சுகாதாரம், சமையலறையில் தூய்மை, மூலப்பொருட்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து இந்த சான்று வழங்கப்படுகிறது.
இது 2 ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாகும். இது வரை 226 ஓட்டல், உணவகங்கள் ஹைஜீன் ரேட்டிங் சான்று பெற்று ள்ளன. மேலும் 46 ஓட்டல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகி ன்றன. இந்த சான்று பெற விரும்புவோர் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம். தர நிர்ணயக்குழு மூலம் ஆய்வு செய்து தர மதிப்பீடு அடிப்படையில் சான்று வழங்கப்படும்.
தமிழகத்திலேயே இது வரை திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிக ஓட்டல் மற்றும் பேக்கரிகள் இந்த சான்று பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.