என் மலர்
நீங்கள் தேடியது "விடுப்பு போராட்டம்"
- ஆர்.எஸ்.மங்கலத்தில் ஊராட்சி செயலாளர்கள் 3 நாட்கள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன்,பொருளாளர் செந்தில்பொன் குமார் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஊரக வளர்ச்சித்துறையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஊதியம் இல்லாத விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 429 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் நீங்கலாக மொத்தம் 396 ஊராட்சி செயலாளர்கள் சம்பந்தப்பட்ட அந்தந்த ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) விடுப்பு கடிதம் அளித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் உள்ள 35 ஊராட்சியில் 4 காலி பணியிடங்கள் நீங்கலாக 31 ஊராட்சி செயலாளர்கள் 3 நாட்கள் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்கான விடுப்பு கடிதத்தை ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) மலைராஜனிடம் வழங்கியுள்ளனர். இத்தகவலை ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் ரவி தெரிவித்தார்.அப்போது ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன்,பொருளாளர் செந்தில்பொன் குமார் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.