என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம்"
- எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார்.
திருப்பரங்குன்றம்
எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் 16-வது ஆண்டு நோட்டு புத்தகம் வழங்கும் விழா ஹார்வி பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் சக்தி வேல், அண்ணாமலை, வள்ளியப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மன்ற செயற்குழு உறுப்பினர் வேட்டையார் வரவேற்றார். பாண்டியராஜன் தொடக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.கே.ராஜேந்திரன், பாண்டியன் நகர் குடி யிருப்போர் நல சங்க தலைவரும், சமூக ஆர்வலரு மான வ.சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர்.
இதில் மாமன்ற உறுப்பி னர்கள் இந்திரா காந்தி, விஜயா, தென் மண்டல ெரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.பி.சிவசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவர் பொன்.மனோகரன், மன்ற துணைத் தலைவர் காளிதாஸ், ஹார்விபட்டி அரவிந்தன், குலசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.