என் மலர்
நீங்கள் தேடியது "2½ அடி உயரம்"
- ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார் வழங்கினார்
- ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்கள் வழங்கினார்.
கன்னியாகுமரி:
ராகுல்காந்தி பாதயாத்திரையின் போது சுங்கான்கடை எல்லை பகுதியில் ராகுல்காந்திக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் அஜிகுமார் தலைமையில் துணை தலைவர்கள், வட்டார தலைவர்கள், கிராம ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு ராகுல் காந்தி மாலை அணிவித்தார். மேலும் ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்களை அஜிகுமார் வழங்கினார்.
அதனை பெற்று கொண்ட ராகுல் காந்தி அந்த புறாக்களை வானில் பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் 2½ அடி உயரமுள்ள தேக்கு மரத்தாலான ராஜீவ் காந்தி உருவ சிலையை ராகுல் காந்தியிடம் அஜிகுமார் வழங்கினார்.