search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் டவர் எதிர்ப்பு"

    • போலீஸ் நிலையம் முற்றுகை
    • ஏ.டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் கூடைவெட்டியான் வட்டம் பகுதியில் ஜெயபால் என்கிற சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    இவரது நிலத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் மூலம் இங்குள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

    இதனால் இங்கு செல்போன் டவர் அமைக்க கூடாது என நிலத்தின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து நேற்று முன்தினம் அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை செல்போன் டவர் அமைக்கும் இடத்தில் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நிலத்தின் உரிமையாளருக்கும் அங்கிருந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை மேற்கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி. புஷ்பராஜ் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.

    ×