search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி தருமபுரி தொழிலாளி பலி"

    • எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டது.
    • தலையில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் ஒரு வேலைக்காக ஓசூர் சென்றுள்ளார்.

    அங்கு வேலையை முடித்துக்கொண்டு ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி அருகே நடந்து சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டது.

    இதில் தலையில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×