search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணி மாத பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள்"

    • விதமாகவும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
    • மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார்.

    ஓசூர்

    ஓசூர் அருகே மோரனபள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராகு, கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் போன்றவற்றை அகற்றும் விதமாகவும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று ஆவணி மாத பவுர்ணமி தினம் சிறப்பு பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார். அதேபோல ராகு , கேது, மகா கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் அம்மனுக்கு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரவு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.

    இதில், தமிழகம் மட்டு மின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மா விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

    ×