என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தசுன் ஷனகா"
- 23-வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
- இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் நாளை அதிகாலை நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பானது கேள்விகுறியாக மாறியுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷனகா பங்கேற்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100-வது போட்டியை விளையாடவுள்ளார். இதன்மூலம் இலங்கை அணிக்காக 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் எனும் சாதனையையும் தசுன் ஷனகா படைக்க உள்ளார். இதற்கு முன் வேறெந்த இலங்கை வீரரும் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதில்லை.
இலங்கை அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகமான தசுன் ஷனகா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி உள்ளார். 5 அரைசதங்களுடன் 1456 ரன்களைக் குவித்துள்ளார். பந்துவீச்சில் 32 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
- தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து தசுன் ஷனகா விலகியுள்ளார்.
- இலங்கை அணி கேப்டனாக தற்போதைய துணை கேப்டன் குசால் மென்டிஸ் செயல்படுவார்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணியை வழிநடத்திய ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சமிகா கருணரத்னே சேர்க்கப்பட்டு உள்ளார்.
உலக கோப்பையில் இனி இலங்கை அணி கேப்டனாக தற்போதைய துணை கேப்டன் குசால் மென்டிஸ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரு ஆட்டங்களில் இலங்கை தோற்றுள்ள நிலையில், தசுன் ஷனகா விலகல் அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.
- இலங்கையை விட இந்திய மைதானங்கள் நன்றாக இருக்கும்.
- இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். இந்த முறை எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில்தான் நடக்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் 20 ஓவர் கிரிக்கெட்தொடர் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்தியாவின் மைதானங்கள் குறித்து நாங்கள் அறிவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும். உலகக்கோப்பை தொடருக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முக்கியமானவை. எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலருக்கு இந்தியாவில் விளையாடிய அனுபவம் கிடையாது. அந்த வகையில் இது எங்களுக்கு மிக முக்கியமான தொடர்.
இலங்கையை விட இந்திய மைதானங்கள் நன்றாக இருக்கும். அதுவும் எங்கள் வீரர்களுக்கு சாதகமாக அமையும். உலகக்கோப்பை டி20 தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணி பலமாக உள்ளது. அதனை வெல்ல மிக சிறப்பாக இலங்கை விளையாட வேண்டும். இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். இந்த முறை எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இலங்கையில் நடந்த லங்கா ப்ரீமியர் லீக் (எல்.பி.எல்) இளம் வீரர்களை அடையாளம் காண உதவியது. இதில் கிடைத்த அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும்.
ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானங்களுக்கு இடையில் வித்தியாசங்கள் உள்ளன. ஆசிய நாடுகளுக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் நன்கு பழக்கப்பட்டவை கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் - தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, சதீர சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, அஷேன் பண்டாரா, மஹீஷ் தீக்ஷனா, டில்ஷான் ராஜதுஞ்சனா, டில்ஷான் மதுஞ்சனகா, டில்ஷான் மதுஞ்சன, மதுஷான், லஹிரு குமாரா, நுவன் துஷாரா
- ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர்.
- சொந்த நாட்டில் விளையாடியது போல் ரசிகர்களின் ஆதரவு இருந்தது.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் பெற்றது.
துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.
பனுகா ராஜபக்சே 45 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), ஹசரங்கா 21 ந்தில் 36 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம்ஷா, ஷதாப்கான், இப்தி கார் அகமது தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 147 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இலங்கை 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.
முகமது ரிஸ்வான் 49 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), இப்தி கார் அகமது 32 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். லியன்கமகே 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் கருணாரத்னே 2 விக்கெட்டும், தீக்ஷனா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி மூலம் இலங்கை அணி 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது. 2-வது ஆடிய அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் இறுதிப் போட்டியில் 2-வது ஆடிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் ஆடிய இலங்கை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.
இதுகுறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியதாவது-
2021-ம் ஆண்டு இதே துபாய் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. அணி கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி கோப்பையை வென்றது. சி.எஸ்.கே. முதலில் ஆடி இந்த வெற்றியை பெற்றது. இது எனது மனதில் இருந்தது. இதுபற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். சி.எஸ்.கே. அணியின் உத்வேகம் இலங்கை அணிக்கு உதவியாக இருந்தது.
ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் அவர்களுக்கு நான் கண்டிப்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சொந்த நாட்டில் விளையாடியது போல் ரசிகர்களின் ஆதரவு இருந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்