search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி பாடத் திட்டம்"

    • கன்னியாகுமரியில் கோவா கவர்னர் பேச்சு
    • விழா முடிவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த 52-வது ஆண்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் 1893 -ம் ஆண்டில் சிக்காகோநகரில் நடைபெற்ற சர்வ தர்ம சபையில் அனைவரையும் ஒன்று சேர்த்து உலக சகோதரத்துவத்தை உரு வாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்த ஆன்மாவை தட்டி எழுப்பும் சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தா சபாக்கிரகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    விழாவுக்கு கன்னியா குமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் வந்தே மாதரம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடினார்கள். பள்ளி துணை முதல்வர் சஞ்சீவி ராஜன் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் சரிகா ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். பின்னர் கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய திருநாடு 3 முக்கியமான நாகரீகங்களை கொண்ட நாடாகும். இந்த உலகத்தில் மனித தன்மையுள்ள மக்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றால் அது நமது பாரத திருநாட்டில் தான் வாழுகிறார்கள். சுவாமி விவேகானந்தருடைய கருத்துக்களை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் உடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் தெரியவரும். சுவாமி விவேகானந்தரின் கொ ள்கைகளை மாணவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற அடி ப்படையில் ஒற்றுமையாக வாழ்கி றார்கள். இந்த உலக த்தில் வேறு எந்த நாட்டிலும் இந்த ஒற்றுமையை பார்க்க முடியாது. இந்த உலகத்தின் மிகச்சிறந்த வளமான நாடு இந்தியா. அதனால்தான் அந்த காலத்தில் செல்வ வளம் மிகுந்த நமது நாட்டை கொள்ளையடிக்க ஆங்கிலேயர்கள் வந்தார்கள். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவாலயத்தை உலகில் உள்ள அனைவரும் பார்த்து அதன் மகிமையை உணர வேண்டும். உக்ரைன் போரில் நடந்த நிகழ்வின் மூலம் இந்திய தேசியக் கொடியின் பெருமையை நாம் தெளிவாக உணர வேண்டும். நம்முடைய தேவையை நாமே நிறைவேற்ற வேண்டும். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு கோவா கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பேசினார். பின்னர் கோவா கவர்னர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை விவேகானந்த கேந்திராவுக்கு ரூ.1 லட்சத்துக்குரிய காசோலையை விவேகா னந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ண னிடம் வழங்கினார். முடிவில் பள்ளி முதல்வர் சரிகா நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியை ஜெயா தொகுத்து வழங்கினார்

    விழா முடிவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ×