என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து மாற்றத்தால் அவதி"
- வாகன ஓட்டிகள் மறியல்
- 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வருவதால் ஆத்திரம்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை தடுப்பதற்காக நேற்று முன்தினம் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய பஸ் நிலைய பணிகள் நிறைவடையாததால் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய மீன் மார்க்கெட் அருகில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. புதிய பஸ் நிலைய பணிகள் நிறைவடைந்த ததைடுத்து கடந்த வாரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் எதிரே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
மேலும் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டிலேயே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர் இதனால் காட்பாடி வேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் யாரும் கண்டு கொள்வது இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்து வதற்காக சென்னை மார்க்கமாக வேலூருக்கு வரும் வாகனங்கள் சென்னை சில்க்ஸ் அருகே சர்வீஸ் சாலையில் திரும்புவதற்கு பதிலாக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நேராக அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல் நேஷனல் தியேட்டர் அருகே இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பெட்ரோல் பங்க் அருகே சென்று சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் குறுகிய சர்வீஸ் சாலையில் சென்றதால் வேலூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் கிரீன் சர்கிள் வழியாக வாக னங்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை சில்க்ஸ் சர்வீஸ் சாலையில் தடுப்புகளை அமைத்ததால் சுமார் 2 கி.மீ தூரம் வாகனங்கள் சுற்றி வர வேண்டியதால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சா லையில் வாகனங்களை நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் போக்குவரத்து மாற்றம் குறித்து தங்களுக்கு தெரியாததால் கலெக்டர் அலுவலக அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்த தாகவும், போக்குவரத்து மாற்றத்தால் சிரமம் அடைந்து உள்ளதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை பைக்கில் முட்டி தள்ளினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்ததைக் கண்ட வாகன ஓட்டிகள் மறியலை கைவிட்டு தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்றனர்.
போக்குவரத்து மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சா லையில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.