search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்வசந்த் எம்பி."

    • மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.
    • தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

    கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மைதானத்தை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

    அதாவது பல ஊர் மற்றும் ஊர் மக்களின் தேவைகளுக்காக சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றினை இயக்கி வந்தனர்.

    அவர்களுக்கு விஜய் வசந்த் எம்பி தனது சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றை வாங்கி மக்களின் தேவைகளுக்காக  வழங்கி அர்பணித்துள்ளார்.


    மேலும் கோணம் அரசு கல்லூரியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.


    இதையடுத்து எல்லைப் போராட்ட தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லா குந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த விஜய் வசந்த் எம்பி அவரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

    • தமிழகம் எங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    • ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை இழிவாக பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் எங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் சந்திப்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால் சிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார்.

    மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். தாரகை கத்பர்ட், வட்டாரத் தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்.
    • பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.

    நாகர்கோவிலில் இன்று முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், Dr. தாரகை கத்பட், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். 

    • விஜய் வசந்த் வெளியிட்ட பேஸ்புக் பதிவு.
    • சமூக வலைதலத்தில் விஜய் வசந்த் நன்றி.

    புதுடெல்லி:

    நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக விஜய்வசந்த் எம்பியை நியமித்து சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி நேற்று கட்சியின் நாடாளுமன்ற செயலாளர்கள் மற்றும் பொருளாளர் ஆகியோரை நியமித்தார்.

    ரஞ்சித் ரஞ்சன் மாநிலங்களவை செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், எம்.கே. ராகவன் மற்றும் அமர் சிங் ஆகியோர் மக்களவை செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக தமிழ்நாட்டை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து விஜய் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    அன்னை சோனியா காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும். மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கும், தலைவி பிரியங்கா காந்திக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாகவும் இந்த மாவட்டத்தின் காங்கிரஸ் நண்பர்கள் அனைவர் சார்பிலும் எனது நன்றி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்த பயணம் தேசிய சர்வதேச அளவில் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.
    • இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்துவர்களுக்கு நன்றி.

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் குறித்து குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி.விஜய்வசந்த் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியாவில் ஒற்றுமையை நிலைநிறுத்தவும், இந்திய மக்களை ஒருங்கிணைக்கவும் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் தேசிய ஒற்றுமை பயணம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறுகிறது.

    7ஆம் தேதி பொதுக் கூட்டத்துடன் குமரியில் ஆரம்பித்த பயணம் 8,9,10 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கெடுத்த இந்த பயணம் தேசிய சர்வதேச அளவில் நமது மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.

    இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    என்னோடு தோளோடு தோள் நின்று அனைத்து ஒத்துழைப்பும் தந்த கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கே.டி.உதயம், டாக்டர் பினுலால் சிங், நவீன் குமார், வட்டார, நகர, பஞ்சாயத்து தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் எனதருமை தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 


     மேலும் அனைத்து ஒத்துழைப்பும் அளித்த காவல்துறை அதிகாரிகள், காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம், மாநகர, நகர, பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது நன்றி.

    பொதுமக்களுக்கு மிக முக்கியமாக நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பெருந்திரளாக கூடி தலைவர் ராகுல் காந்தி அவர்களை அன்புடன் வரவேற்ற குமரி மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றி.

    ×