search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரி ஜெகநாதர்"

    • பூரி ஜெகநாதர் பிரபஞ்சத்தின் கடவுளாகக் கருதப்படுபவர்.
    • மோடிஜி ஜெகநாதரை விட மேலானவரா என கேள்வி எழுப்பினார்.

    டேராடூன்:

    பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பூரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என தெரிவித்தார். அதன்பின், சுதாரித்துக் கொண்ட அவர், பூரி ஜெகநாதரின் சிறந்த பக்தர் பிரதமர் மோடி என்றார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பா.ஜ.க.வுக்கு மிகவும் திமிர் பிடித்துவிட்டது, இவர்கள் தங்களை கடவுளாகக் கருதத் தொடங்கி உள்ளனர். பிரபஞ்சத்தின் கடவுளாகக் கருதப்படுபவர் பூரி ஜெகநாதர்.

    பூரி ஜெகநாதர் மோடிஜியின் பக்தர் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மோடிஜி ஜெகநாதரை விட மேலானவரா? பா.ஜ.க. அவர்களின் ஆணவத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

    • பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.
    • ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று ஒடிஷா பாஜக தலைவர் சம்பித் பத்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    • பஞ்சாப் மன்னர் ரஞ்சித்சிங், ஜெகநாதருக்கு நன்கொடையாக அளித்தார்.
    • அவரது மகன் துலீப்சிங்கிடம் இருந்து ஆங்கிலேயர்கள் பறித்துச் சென்றனர்.

    புவனேஸ்வர்:

    இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம், பிரிட்டன் படையெடுப்பின் போது அந்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்த அந்த வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா என்ற அமைப்பு, கோகினூர் வைரம் பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளது. பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷாவை போரில் தோற்கடித்தார் என்றும், இந்த வெற்றியின் நினைவாக பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரத்தை நன்கொடையாக அவர் அளித்தார் என்று ஜெகன்னாத் சேனா அமைப்பாளர் பிரியதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    எனினும் அந்த வைரம் உடனடியாக ஒப்படைக்கப்படவில்லை, ரஞ்சித்சிங் மறைவுக்கு பின்னர் ஆங்கிலேயர்கள் கோகினூர் வைரத்தை அவரது மகன் துலீப்சிங்கிடம் இருந்து பறித்துச் சென்றனர் என்றும் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிரிட்டன் ராணிக்கு கடிதம் அனுப்பிய பிறகு, அக்டோபர் 19, 2016 அன்று பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து தமக்கு ஒரு தகவல் வந்ததாக பட்நாயக் கூறியுள்ளார். இந்நிலையில் கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியா கொண்டு வருவதற்கான செயல் முறையை எளிதாக்கும் நடவடிக்கையில் தலையிடுமாறு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு, பட்நாயக் மனு அனுப்பியுள்ளார்.

    ×