என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் மோதி பலி"

    • உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விவசாயி பஸ் மோதி பலியானார்.
    • திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

    விழுப்புரம்:

    உத்திரமேரூர் நாஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை (வயது 76) விவசாயி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வேனில் திண்டிவனத்தில் நடக்கும் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்தார்.

    அப்போது திருமண நிகழ்ச்சியின் போது திருமண மண்டபத்திற்கு எதிரே உள்ள கடைக்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் வெள்ளை மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது. இதில் வெள்ளை தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து படுகாயம் அடைந்த வெள்ளையை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு இன்று காலை வெள்ளை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

    திருமண விழாவிற்கு வந்த இடத்தில் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் முறையாறு அருகே நேற்று காலை புதுச்சேரி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் எதிர்பாராத விதமாக அரசு பஸ் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்.

    • செஞ்சி அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் பஸ் மோதி பலியானார்.
    • செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி என்ற ஊரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரபு (வயது 30). இவர் செஞ்சி போலீஸ் நிலையம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று பிரபு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்தசெஞ்சி போலீசார் பிரபுவின உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×