என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1032 கொசு புழு"

    • கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
    • காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு துறையினருக்கு பொறுப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் பேசும் போது கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மேலும் வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.

    இதனால் காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு துறையினருக்கு பொறுப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சிகளில் 9,641 வீடுகள் உள்ளன. கொசு புழு ஒழிப்பு பணியாளர் தினமும் கொசு புழு ஒழிப்பு பணி செய்ய வேண்டும். இதனால் கொசு உரு வாகாத சூழ்நிலை ஏற்படும்.

    மாவட்டம் முழுவதும் 1032 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தற்சமயம் 245 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    போதுமான தடுப்பு நடவடிக்கை எடுக்க இயலாத நிலை உள்ளதால் டிசம்பருக்குள் மேலும் 787 கொசு ஒழிப்பு களப்பணி யாளர்களை நியமித்து அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் கொசு உருவாகாத நிலை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் மழை காலத்தில் தேவையில்லாத நீர் தேங்கி உள்ள பாத்திரங்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டி உள்ளதால் பணிசெய்யும் இடங்களில் தூய்மைபணியாளர்கள் அனுப்ப வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் கண்ட பகுதிகளில் உடனடியாக புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்க ளுக்கு ஒரு முறை சுத்தம் செய்து குளோரின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    புகை மருந்து அடிக்கும் கருவிகளை பழுது நீக்கம் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக புகை மருந்து அடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் அனைத்து வீடுகளிலும் கொசு ஒழிப்பு பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். குடிநீரில் குளோரின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    அங்கன்வாடி மையங்க ளுக்கு வரும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார செவிலியரிடம் தெரிவிக்க வேண்டும்.

    மகளிர் சுய உதவி குழுக்களில் பணி புரிபவர்களின் பகுதியில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனே அரசு மருத்துவ மனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளியில் இறை வணக்க த்தின் போது மா ணவர்களுக்கு கொசுப்புழு உருவாகும் இடங்கள், கொசுவால் ஏற்படும் நோய்கள் குறித்து விளக்க வேண்டும்.

    கல்லூரி மாணவ- மாணவிகள் மூலம் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கொசு ஒழிப்பு பணியாளர்கள் தேவையற்ற நீர் தேங்கும் பொருட்களை சாக்கு பையில் கட்டி துப்புரவு பணியாளர்கள் எடுத்து செல்ல ஏதுவாக வீட்டின் முன்புறம் வைக்க வேண்டும்.

    சேகரிக்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக துப்புரவு பணியாளர்கள் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லவேண்டும்.

    நீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் கண்ட பகுதிகளில் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் கொசு மருந்து கண்டிப்பாக அடிக்க வேண்டும்.

    வீட்டிற்கு உட்பகுதியில் புகை மருந்து அடித்து 15 நிமிடங்கள் வரை வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

    அனைத்து பகுதி களிலும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மைபணியாளர்கள் இணைந்து தேவையற்ற பொருட்களை அப்புற ப்படுத்தி நீர் தேங்கியுள்ள மற்றும் அசுத்தமான பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளித்து நோய் தொற்று ஏற்படாமல் செய்ய வேண்டும்.

    மேலும் அனைத்து மேல்நிலைத் தொட்டிகளிலும், மாதம் இரு முறை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட வேண்டும். வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி செய்யும் போது வீடுகளில் காய்ச்சல் கண்டறியபட்டால் உடனடியாக சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கி ணைந்து பணியாற்றி டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) சோமசுந்தரம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சூர்யா, மாநகர நல அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×