என் மலர்
நீங்கள் தேடியது "முட்டைகள் சேதம்"
- முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்லடம்:
நாமக்கல்லில் இருந்து கோவைக்கு 90 ஆயிரம் முட்டைகளை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. அதனை நாமக்கல்லை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஓட்டினார். அவருடன் கந்தசாமி என்பவரும் உடன் வந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவு என்ற இடம் அருகே சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. மேலும் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த நந்தகுமார் மற்றும் கந்தசாமி ஆகியோருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மினி லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
- விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
தஞ்சாவூர் பகுதியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மினி லாரி ஒன்று வாத்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கிளம்பியது.
மினி லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் லாரி கிளீனராக உடன் வந்துள்ளார்.
லாரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள மேம்பாலத்தில் லாரி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 26 ஆயிரம் வாத்து முட்டைகள் உடைந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் மனோஜ் குமார், கிளீனர் பால்ராஜ் ஆகிய 2 பேருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை யடுத்து போக்குவரத்து சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.