search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுத்து"

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தகவல்
    • போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மூவேந்தர் நகரில் ரூ. 13 லட்சம் மதிப்பிலான சாலை பணியை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒயிட் ஹவுஸ் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.‌ ஏற்கனவே டதி பள்ளி பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது .இதை ஒழுங்குப்படுத்தும் வகையில் ஒயிட் ஹவுஸ் தெருவில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான முதல் கட்ட ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

    கோட்டார் சவேரியார் ஆலய பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட்டு வழக்கம் போல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ஆணையர் ஆனந்த மோகன் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர், மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×