என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீதாராம் யெச்சூரி"

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இது குறித்த பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை வென்றார். அவரது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.



    "சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சமாக இருந்தார். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதையும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், பின்தொடர்வோருடனும் உள்ளன, ஓம் சாந்தி," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    • உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் திரு. சீதாராம் யெச்சூரி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன்.

    மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியுன், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

    சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி இளம் வயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். பதின் வயதிலேயே தெலுங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டிய யெச்சூரி, நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர்.

    மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான எனது போராட்டத்திற்கு சீதாராம் யெச்சூரி துணை நின்றது எனது மனதில் இப்போது நிழலாடுகிறது. 2006ஆம் ஆண்டு மே மாதம் தில்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன்.

    அதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைகப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுத் திரட்டினேன். பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி அவர்களும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும்.

    யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மஜக தலைவர் தமிமுன் அன்சாரி இரங்கல் கூறுகையில்,"சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையை தருகிறது. பாசிச சக்திகள் அதிகார மிடுக்குடன் நாட்டை மிரட்டி வரும் காலகட்டத்தில்; அதை எதிர்த்து முன் களத் தலைவராக அவர் நின்றாடிய அரசியல் களம் அனலாக இருந்தது. கம்யூனிச இயக்கம் மேலும் வலுவாக நடைபோட வேண்டிய தருணத்தில், அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும்" என்றார்.

    • உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளை மறுநாள் (செப்.14) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வைக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. 

    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சீதாராம் யெச்சூரி (72), உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

    நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

    சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
    • உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாரம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

    முன்னதாக, பொதுமக்கள் அஞ்சலிக்காக சிபிஎம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    நுரையீரல் தொற்று பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.

    இந்நிலையில், ஆராய்ச்சி, பயிற்சி நோக்கங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர்.
    • கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டாலும் சீதாராம் யெச்சூரி முடித்து தருவார்.

    சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், மறைந்த சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    பிறகு அவர் உரையாற்றியதாவது:-

    சீதாராம் யெச்சூரியின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது உடல்நலம் குறித்து விசாரித்து கொண்டே இருந்தேன்.

    சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர்.

    கருணாநிதி ஆட்சியின்போது கோவையில் நடந்த மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேசினார். கருணாநிதி இல்லாமல் தமிழ்நாடு இல்லை என பேசியவர் சீதாராம் யெச்சரூரி.

    கருணாநிதி எழுதிய தாய் காவியம் குறித்து புகழ்ந்து பேசியவர். சீதாராம் யெச்சூரி பேச்சுக்கு கருணாநிதி பாராட்டு தெரிவித்தார். நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி.

    கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டாலும் சீதாராம் யெச்சூரி முடித்து தருவார்.

    சீதாராம் யெச்சூரி சிரிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தந்த தலைவர்களில் அவரும் ஒருவர்.

    தேவகவுடா, குஜ்ரால் ஆட்சியின்போது இடதுசாரி பங்கில் யெச்சூரியே முக்கிய காரணம்.

    இடது சாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்தவர். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்க முக்கிய காரணமானவர். தற்போது, பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாகவும் முக்கியமாக இருந்தவர். இளைய சமூதாயத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியவர்.

    சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
    • யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

    பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

    அப்போது, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.

    பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, முதல்வர் அதைத் தொடர்ந்து மறைந்த சிபிஐ-எம் பொதுச்செயலாளர் யெச்சூரியின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு, முதலமசை்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    முதல்வரை தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

    • ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
    • தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.

    ஐதராபாத் :

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.

    அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால், உரிமைகள் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமானால், விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டுமானால், பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை.
    • யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி இப்போது பயனற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணம், கேரளாவில் 18 நாட்கள் நடைபெறுகிறது, உத்தரப் பிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. கர்நாடகாவில் 19 நாட்கள் நடைபெறுகிறது என்றால், அது குறித்து ராகுல் காந்தியிடம் கேளுங்கள், அவர் பதில் அளிப்பார்.

    நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சி மீது கோபப்பட வேண்டும்? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது திட்டங்களை நிறைவேற்ற ஜனநாயக உரிமை உள்ளது. இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பயனற்றது.

    இது மக்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தலுக்கு முதலில் மாநில அளவில் ஒன்றுமை உருவாக்கப்படும். அதிகபட்சமாக மதச்சார்பற்ற ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற சிபிஎம் முயற்சி செய்து வருகிறது.

    2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வாஜ்பாய்க்கு எதிராக யார் என்ற கேள்வி எழுந்தது.கடைசியில் அவருக்கு எதிராக, பாஜக அல்லாத ஆட்சி அமைந்தது, அது 10 ஆண்டு நீடித்தது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது அவசியம், அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×