என் மலர்
நீங்கள் தேடியது "முருகன் சிலை"
- இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
- முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க முருகன் சிலையை புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோவிலின் நிறுவன தலைவர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.
இந்த முருகன் சிலைக்கு இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
- எந்திரம் மூலம் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
- சிலை கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூர் கிராமம் மேல தெருவில் 400 ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற வரலாறு சிறப்புமிக்க விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த சிவாலயம் சிதலமடைந்து ஆக்கிரமிப்பு காரணமாக பராமரிப்பு இல்லாமல் கிடந்தது.
அதை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து விஸ்வநாதர் கோவில் கட்டுவதாக முடிவெடுத்து கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்திரம் மூலம் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிலை ஊர் பொதுமக்களுடைய பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாள், விநாயகர் மற்றும் சாமி சிலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலை கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் இந்த கோவில் கட்டும் பணிகளை ஊர் பொதுமக்களே செய்ய முன் வந்தது சிறப்பாகும்.
- வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
- முருகன் சிலை நாகை அருங்காட்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் முருகன் சிலை ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கி கிடந்தது.
இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தை சேர்ந்த வினோத்குமார்(வயது 38) என்பவர் வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர் ரவிக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் அவர் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
சுமார் 1½ அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன அந்த சிலையை அவர் தனது அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.
பின்னர் இதுகுறித்து ரவி, வேதாரண்யம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த சிலை நாகை அருங்காட்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிலை அங்கு எப்படி வந்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.