என் மலர்
நீங்கள் தேடியது "ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு"
- இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் காவல் நிலையத்தில் கம்பீர் அளித்துள்ளார்.
- கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பா.ஜ.க. எம்.பி.-யுமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் கம்பீர் புகார் அளித்துள்ளார்.
'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
தனது புகாரில், தனக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்ததாகவும், இரண்டிலும் "IKillU" என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் உடனடியாக வந்துள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டித்த விளையாட்டு வீரர்களில் கம்பீரும் ஒருவர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இதை செய்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷைபு என்பவர் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கூறி கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- இந்த வழக்கு தொடர்பான விசாரணை எர்ணாகுளம் தேசிய புலனாய்வு கோர்ட்டில் நடந்து வந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு வளைகுடா நாடுகளுக்கு சென்ற சிலர் அங்கு தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக புகார் எழுந்தது.
இதற்கிடையே கேரளாவை சேர்ந்த வாலிபர் ஷைபு என்பவர் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கூறி கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை எர்ணாகுளம் தேசிய புலனாய்வு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் கேரள வாலிபர் ஷைபு குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விபரத்தை வருகிற 19-ந் தேதி தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்தார்.