search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் அணி"

    • பாபர் அசாம் கேப்டனாக இருந்த போது அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.
    • சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்.

    கராச்சி:

    சமீபத்தில் உள்நாட்டில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் தோற்றது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறுகையில், 'சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்காமல் சொந்த மண்ணில் நடக்கும் தொடரை வெல்ல முடியாது. கடந்த 3-4 ஆண்டுகளாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வாரியம் சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் பொறுமையாக இருப்பதில்லை.

    பாபர் அசாம் கேப்டனாக இருந்த போது அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய போதும், சுழற்பந்து வீச்சாளர்களால் தான் அங்கு டெஸ்ட் போட்டிகளை வென்றோம். கடந்த காலத்தில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் போல் வலிமையான வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது இல்லை.

    இருப்பினும் அவர்கள் தொடரை கைப்பற்றி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த வாரம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரே அதற்கு சான்று' என்றார்.

    • நாட்டுக்காக விளையாட வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என்றார் வாகன்.
    • பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என்றார் கம்ரான் அக்மல்.

    கராச்சி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து ஜாஸ் பட்லர், மொயீன் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜாக்ஸ் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பே வெளியேறினர்.

    இதனால், முழுமையாக விளையாடுங்கள். இல்லையெனில் ஐ.பி.எல். தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என இர்பான் பதான் விமர்சித்தார். அதேபோல, பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

    இதற்கிடையே, நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், சுமாரான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதைவிட தரமான ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதே சிறந்தது என தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என கம்ரான் அக்மல் ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கம்ரான் அக்மல் கூறியதாவது:

    அது மிகவும் வலியைக் கொடுக்கும் கருத்தாகும். ஆனால் அவருடைய கருத்து சரியானது என நினைக்கிறேன்.

    அனைவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெவல் தெரியும். இப்போதெல்லாம் நாம் அயர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக தோற்கிறோம்.

    எனவேதான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் கடினமானது அல்ல என மைக்கேல் வாகன் தெரிவித்தார். அதனால் தவறு நம்முடையது.

    ஒருவேளை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.

    ஐ.பி.எல். தொடரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே 40,000 முதல் 50,000 ரசிகர்களுக்கு முன் சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பங்கேற்கின்றனர். எனவே அது கடினமான மற்றும் தரமான கிரிக்கெட்டாகும் என தெரிவித்தார்.

    • ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளது.
    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்நிலையில் இந்திய அணி ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் பாகிஸ்தானும் டி20 உலகக் கோப்பைக்கான தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

    • நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இலங்கையுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

    நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் மீதமுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கஷ்டமாகி உள்ளது.

    பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்தை 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும்.

    2.3 ஓவர்களில் இலக்கை எட்டுவது நடக்காத விஷயம். வேண்டும் என்றால் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 112 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    +0.036 ரன்ரேட்டுடன் உள்ள பாகிஸ்தானுக்கே இந்த நிலைமை என்றால் நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது. ஆப்கானிஸ்தான் -0.338 ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும்.

    • பாபர் அசாம் தலைமையிலான அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார்.
    • பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இலங்கைக்கு சென்று அங்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 30-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கிறது. இவ்விரு தொடருக்கான பாகிஸ்தான் அணியை புதிய தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் தேர்வு செய்து நேற்று அறிவித்தார்.

    பாபர் அசாம் தலைமையிலான அந்த அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார். பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணி வருமாறு:- பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான், அஹா சல்மான், இப்திகர் அகமது, முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், தயாப் தாஹிர், சாத் ஷகீல், ஷதப் கான் (துணை கேப்டன்), முகமது நவாஸ், உசாமா மிர், பகீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி.

    • டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
    • காயத்தால் அவதிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார்.

    கராச்சி:

    7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் துணை கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:

    பாபர் அசாம் (கேப்டன்) , ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யுஸ்மான் காதர்.

    காத்திருப்பு வீரர்கள் - பகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி

    ×