என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமெரிக்க தூதர்"
- அமெரிக்க தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து கடந்த ஜனவரியில் ஓய்வுபெற்றார்.
- வினய் குவாத்ரா விரைவில் அமெரிக்க தூதராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து கடந்த ஜனவரி மாதம் ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் குவாத்ராவை நியமனம் செய்து இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வினய் குவாத்ரா விரைவில் அமெரிக்க தூதராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளது.
வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால், இந்தியா-அமெரிக்க உறவுகளில் உறுதியையும் தொடர்ச்சியையும் கொண்டு வருவார் என்பதற்காக வினய் குவாத்ராவுக்கு தூதர பதவி வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
வினய் குவாத்ரா சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்ற விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தூதர் தெரிவித்தார்.
வாஷிங்டன்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.
இந்த கலவரத்தை அடக்கி, மணிப்பூரில் அமைதி திரும்பு நடவடிக்கைகளை எடுக்க ஆளும் பா.ஜ.க. முதல்வர் தவறி விட்டதாகவும், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நிலைமையை சரியாக கையாளவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் மே மாதம் மணிப்பூரில் ஒரு சம்பவம் நடந்ததாக வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. நாட்டையே அதிர வைத்த இந்த வீடியோ காட்சிகளில் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் கும்பல், மற்றொரு இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர். பிறகு அந்த பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்திருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை. இப்போதுதான் அது குறித்து கேள்விப்படுகிறேன். அக்கம்பக்கத்திலோ, உலகெங்கும் உள்ள நாடுகளிலோ அல்லது அமெரிக்காவிலோ, மனிதர்கள் துன்பப்படும்போதெல்லாம் எங்கள் இதயம் நொறுங்குகிறது. இந்த தருணத்தில் இந்திய மக்களின் துயரத்தையும் மனவேதனையையும் உணர்ந்து நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் 140 கோடி மக்களையும் இந்த சம்பவம் வெட்கப்பட வைத்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.
- வீடியோ 2.35 லட்சம் பார்வைகளுடன் 4,300-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
- வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் பலரும் தங்கள் மாநில உணவு வகைகளை உண்டு மகிழ வருமாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பெரிய வாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டது. ஸ்பூன், கத்தி இல்லாமல் கைகளில் எடுத்து உண்பது வித்தியாசமாக இருப்பதாக கூறிய அவர், கார பணியாரம், தேங்காய் சட்னி, வடை, கூட்டு, பொறியல் என 14 வகைகளுடன் உணவுகளை ருசித்தார். பாயாசத்துடன் அவர் தனது உணவை முடித்தார். இது நல்ல சுவையாக இருந்தது என கூறினார்.
இதுதொடர்பான வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வணக்கம், தென்னிந்தியாவின் தாழி உணவினை வாழை இலையில் சாப்பிட்டேன். தென்னிந்திய உணவு என்னை மிகவும் ஈர்த்துள்ளது. சென்னைக்கு என் இதயத்தில் இடம் உள்ளது. விரைவில் உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த வீடியோ 2.35 லட்சம் பார்வைகளுடன் 4,300-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் பலரும் தங்கள் மாநில உணவு வகைகளை உண்டு மகிழ வருமாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Vanakkam from Tamil Nadu Bhawan in Delhi! Today, I tried the iconic south Indian thali on a banana leaf, and I am so impressed by the complexity of these delicious south Indian delights. Chennai, you have my heart and I am excited to see you soon. #AmbExploresIndia pic.twitter.com/HrUoiD0Dma
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia) June 14, 2023
- அமெரிக்க செனட் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ற தன் மூலமாக அவருடைய பெயர் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க விமான படையின் உதவி செயலாளராக ரவிசவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஆட்சி மற்றம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகினார்.
இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி (வயது52) நியமனம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. அமெரிக்க செனட் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ற தன் மூலமாக அவருடைய பெயர் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவருடைய நியமனத்துக்கான அறிவிப்பு வெளியாகும்.
இதேபோல அமெரிக்க விமான படையின் உதவி செயலாளராக ரவிசவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்க வாழ் இந்தியரான அவர் தேர்வு பெற்றுள்ளார்.
- இந்திய வம்சாவளி ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50).
- இதற்கான ஒப்புதலை செனட் சபை வழங்கி விட்டது.
வாஷிங்டன்
நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி விட்டது.
காஷ்மீரி பண்டிட் இனத்தை சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றயை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பிறந்தவர். தனது 2 வயதிலேயே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தனது நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் செனட் சபையின் வெளியுறவு குழு விசாரணை நடத்தியபோது இவர், "நான் இந்தியாவில் பிறந்தேன், அமெரிக்காவில் உருவாக்கப்பட்டேன்" என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
அதுமட்டுமின்றி, "சின்சினாட்டியில் என்னை வளர்த்தெடுத்தவர் என் அம்மா. என் அப்பா என் இளம் வயதிலேயே பிரிந்து சென்று விட்டார். அது எனது வாழ்க்கையின் திசையை, ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்தது" எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "இரக்கம், பச்சாதாபம், நேர்மை மற்றும் வியர்வை சமத்துவம் ஆகியவை நம் நாட்டில் ஏதோ ஓன்றைக் குறிக்கின்றது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்மை நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகப் பார்க்க இதுவே காரணம். எனது கதை தனித்துவமானது இல்லை என்றாலும் கூட, இது அமெரிக்க உணர்வு மற்றும் அமெரிக்க கனவின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை பிரதிபலிக்கிறது" எனவும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்