என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிளில்"
- வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோடு:
பவானி போலீசார் ஜம்பை, கோட்டை அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
போலீசார் அவரை நிறுத்தி விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த முகமத் ஜின்னா என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் அதே பகுதி யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (24) என்பதும் கஞ்சா பொட்ட லங்களை கடத்தி விற்ப னைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கைதான 2 பேரிடம் இருந்தும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்ய ப்பட்டது.
- பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார்.
- மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை மஜீத் வீதியை சேர்ந்தவர் சலீம். இவர் பெருந்துறை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பேகம் (வயது 52). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று ஈரோட்டில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக சலீம் மற்றம் பேகம் இருவரும் ஈரோடு சென்று விட்டு பின்னர் பெருந்துறை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.
பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார். உடனடியாக சலீம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்