என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹைட்ரஜன் ரெயில்"

    • மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது.
    • கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் மொத்தம் 19 ரெயில்வே மண்டலங்கள் உள்ளது. இங்கிருந்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் அம்ரித் பாரத், வந்தே பாரத் ஆகிய ரெயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், உலக நாடுகளுக்கு இணையாக ரெயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் ரெயிலை உற்பத்தி செய்ய மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் ஹைட்ரஜன் ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது.

    சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஹைட்ரஜன் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெயிண்ட் அடிப்பது, ஹைட்ரஜன் சிலிண்டர்கள் இணைப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடைய உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலானது அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில்தான் அடுத்த மாதம் சோதனை ஓட்டமும் நடைபெறுகிறது. ரெயிலில் 1,200 எச்.பி. திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த ரெயில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     

    ஹைட்ரஜன் ரெயில் என்ஜினின் முழுத் தோற்றத்தை படத்தில் காணலாம்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரெயில் உலகில் அதிக திறன் கொண்ட ரெயிலாகும். மற்ற நாடுகளில் அதிகபட்சம் 5 பெட்டிகள் வரை இருக்கும். ஆனால், முதன்முறையாக இந்தியாவில் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. இது உலக நாடுகளுக்கே ஒரு முன்னுதாரணம். ஒவ்வொரு ரெயிலும் ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்படும். கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில்தான் முதல் ரெயில் வடக்கு ரெயில்வேயில் இயக்கப்பட உள்ளது. ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. விரைவில் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் இந்திய ரெயில்வேயில் கார்பன் உமிழ்வுவை பூஜ்ஜியமாக மாற்றும் முயற்சியில் இந்த ஹைட்ரஜன் ரெயில் முன்னோடியாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    திருப்பதி:

    நீராவியில் இயங்கும் ரெயில்கள் என்று கேள்விப்பட்டோம். நிலக்கரியில் இயங்கும் ரெயில்களைப் பார்த்தோம். தற்போது மின்சார ரெயில்களை பார்க்கிறோம். விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில்களைப் பார்க்க உள்ளோம்.

    இந்திய ரெயில்வே ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. தண்ணீரில் மட்டுமே இயக்கப்படும் இந்த ரெயில் டிசம்பர் மாதத்தில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    ஜெர்மனி நாட்டில் ஹைட்ரஜன் ரெயில்கள் 2018-ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. அது போல சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்திய ரெயில்வே ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது.

    இந்த ரெயிலை இயக்க ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன். அதனால் நீராவி மட்டுமே வெளியேறுகிறது.

    இந்த ரெயிலை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சத்தமும் மிகக் குறைவு. ஒருமுறை எரிபொருள் தொட்டியை நிரப்பினால், அது 1000 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.

    முதலில் ஹரியானாவில் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் ஹைட்ரஜன் ரெயில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டார்ஜிலிங் இமயமலை, ஊட்டி மலை, கல்கா-சிம்லா போன்ற மலைப்பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில்களை இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளன.

    ஒவ்வொரு ஹைட்ரஜன் ரெயிலையும் உருவாக்க ரூ.80 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக மொத்தம் 35 ஹைட்ரஜன் ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. டிக்கெட் விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

    • ஹைட்ரஜன் ரெயிலை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று எரிபொருளாக உள்ளது.

    புவனேஸ்வர்:

    உலகின் முதல் முறையாக ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் பயணிகள் ரெயில் ஜெர்மனியில் கடந்த மாதம் செயல்பாட்டு வந்தது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று எரிபொருளாக உள்ளது. அதே சமயம் வேகம், நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மற்ற ரெயில்களை விட ஹைட்ரஜன் ரெயில் சிறந்து விளங்குகிறது.

    இந்தியாவிலும் ஹைட்ரஜன் ரெயிலை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த ரெயில் தயாரிப்பு பணிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    உலகின் தலை சிறந்த 5 ரெயில்களில் ஒன்றாக இந்த ரெயில் உள்ளது என தெரிவித்த அவர், 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவில் ஹைட்ரஜன் ரெயில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

    ×