என் மலர்
நீங்கள் தேடியது "பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்"
- பெரியாரின் 144-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
- சமூகநீதி நாள் உறுதிமொழியும் ஏற்று கொண்டனர்.
ஊட்டி,
பெரியாரின் 144-வது பிறந்த நாளான சமூகநீதி நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பெரியாரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து சமூகநீதி நாள் உறுதிமொழியும் ஏற்று கொண்டனர். விழாவில் ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் அனைவரையும் வரவேற்றார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், நகர செயலாளர்கள் ராமசாமி, சேகர், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, நெல்லை கண்ணன், லாரன்ஸ், சிவானந்தராஜா, சுஜேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, முன்னாள் வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை, நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, பரிமளா, சிவகாமி ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி செயலாளர்கள் பிரகாஷ், உதயகுமார், சின்னவர், சதீஷ்குமார், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், எல்கில் ரவி, காந்தல் ரவி, கர்ணன், ராஜா, தேவராஜ், யோகேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பாபு, நவுபுல், பேரூராட்சி மன்ற தலைவர்கள் கலியமூர்த்தி, கௌரி, சித்ராதேவி, ஹேமமாலினி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆல்வின், டெர்மிலா, மாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.