search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி"

    • நிலத்தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் (ம) கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார். இவரது மனைவி அனிதா (வயது - 30) அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் வெள்ளைகண்ணு என்பவருக்கும் நேற்று பிற்பகல் நிலத்தகராறு ஏற்பட்டது.

    இதில் வெள்ளைக்கண்ணு அனிதாவின் இடது கையில் அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அனிதா சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது சம்பந்தமாக கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×