search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் கண்காணிப்பதில்லை பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது"

    • இளைஞர்களின் சாகசங்களால் பொதுமக்கள் அச்சம்
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சுற்றி வருவதும், அங்கு நிற்கும் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் மீது இடிப்பது போல வாகனங்களை ஓட்டி வருவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றது.

    இளைஞர்கள் இதுபோன்று சாகசங்கள் செய்யும் போது பஸ்களை இயக்கும் டிரைவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

    நேற்று மாலை புதிய பஸ் நிலையத்தின் நடுவே இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பஸ்களுக்கும், பொதுமக்களுக்கும் வழி விடாமல் மாணவர்கள் மற்றும் பயணிகள் இடையே ரகளையில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக புதிய பஸ் நிலையத்தின் நடுவே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டது பொது பொது மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

    போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மீது போலலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் காலை, மாலை பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பதில்லை எனவும் பெற்றோர்கள், பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்லும் பஸ்சை பின் தொடர்ந்து செல்லும் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    காலை மாலை இரு வேலைகளிலும் புதிய பஸ்நிலையம், ராஜவீதி, பெருமாள்கோவில் தெரு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×