search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிடிஏ"

    • கேமிங் உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேம்களில் ஒன்றாக GTA 6 இருக்கிறது.
    • புதிய GTA 6 டெஸ்ட் பில்டில் இருந்து எடுக்கப்பட்ட கேம்பிளே வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    ராக்ஸ்டார் நிறுவனத்தின் புதிய GTA 6 கேமிற்கு உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. GTA 6 வெளியீடு மற்றும் இதர தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்போது GTA 6 கேம்பிளே வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

    தற்போது லீக் ஆகி இருக்கும் வீடியோ GTA 6 டெஸ்ட் பில்டில் இருந்து எடுக்கப்பட்டவை போன்றே காட்சியளிக்கின்றன. கேம்பிளே வீடியோக்களின் படி GTA 6 பல்வேறு கதாபாத்திரங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. கேம்பிளே வீடியோவானது "டீபோடியுபர்ஹேக்கர் -teapotuberhacker" என்ற நபர் GTA ஃபோரம்களில் பகிர்ந்து இருக்கிறார். முன்னதாக இதே நபர் தான் உபெர் நிறுவன சர்வர்களை ஹேக் செய்து இருந்தார்.


    இணையத்தில் வெளியாகி இருக்கும் கேம்பிளே வீடியோக்கள் உண்மை தான் என ராக்ஸ்டார் கேம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் இம்முறை வெளியாகி இருக்கும் GTA 6 வீடியோ உண்மையே. வீடியோ கேம் வரலாற்றில் இது மிகப் பெரும் லீக் என இணையத்தில் பரவலாக கூறப்படுகிறது.

    கேம்பிளே வீடியோ மட்டுமின்றி ஸ்கிரீன்ஷாட்களும் ட்விட்டர் மற்றும் ரெடிட் போன்ற தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. சில தகவல்களில் புதிய GTA 6 கேமில் லுசியா, ஜேசன் என சில கதாபாத்திரங்களின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன. GTA 6 கேம் 2014 முதல் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த கேம் சார்ந்த விவரங்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி GTA 6 கேம் 2025 ஆண்டு தான் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக GTA 6 கேம் கணினிகளில் வெளியாகும் முன் பிளே ஸ்டேஷன் 4 மற்றும் அதன் பின் வெளியான கன்சோல்கள், எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எஸ், எக்ஸ் மற்றும் அதன் பின் வெளியான கன்சோல்களுக்கு முதலில் வெளியிடப்பட இருக்கிறது.

    ×