search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 சிறுவர்கள் பலி"

    • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற சிறுவர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 15 சிறுவர்கள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வந்தனர்.கடந்த 5ந் தேதி இரவு உணவு மற்றும் இனிப்பு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.இதில் மாதேஷ்(வயது 14), அத்தீஷ் (11), பாபு (10) ஆகிய 3 சிறுவர்கள் பலியாகினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    கலெக்டர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஆய்வறிக்கை சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் கூறுகையில் ,ஆய்வின் அடிப்படையில் முதல்கட்டமாக ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் பூட்டப்பட்டது. சிறுவர் நலனை கருத்தில் கொள்ளாமல் கவனக்குறைவாக சேவாலயம் நடத்தப்பட்டு வந்துள்ளது.சிறுவர்கள் தங்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. சேவாலய உரிமத்தை ரத்து செய்யுமாறு ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • குளிக்க சென்றபோது பரிதாபம்
    • விநாயகர் சிலைகள் கரைக்க பள்ளம் தோண்டியது தெரியாமல் சேற்றில் சிக்கினர்

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரம் ரிக்க்ஷா காலனியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன்கள் ஆகாஷ் (வயது 12), ஹரிஷ் (11).இவர்கள் இருவரும் அப்துல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மகன் இமானுவேல் (13). காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.சிறுவர்களின் தந்தைகள் இருவரும் வேலூரில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்கள். இந்த நிலையில் சிறுவர்கள் 3 பேரும் அங்குள்ள சாய்பாபா கோவில் பின்புறம் அமைந்துள்ள குட்டைக்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.

    வீட்டில் இருந்து சென்ற தங்களது குழந்தைகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடி சென்ற பெற்றோர், அங்குள்ள குட்டை பகுதியில் கரையில் சைக்கிள் மற்றும் உடைகள் இருந்ததை பார்த்தபோது அங்கு தங்களது குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற அச்சத்துடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரில் தேடிய போது ஆகாஷ், ஹரிஷ் இருவரின் உடல்களும் கண்டு பிடிக்கப்பட்டது. பதறிப்போன அவர்கள் இருவரையும் தூக்கி கொண்டு பொய்கையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அதைத்தொடர்ந்து இம்மானுவேல் உடலையும் மீட்டு வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.3 பேரின் உடல்களையும் பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் 3 சிறுவர்களும் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுவர்கள் குளிக்கச் சென்ற குட்டையில் அடிக்கடி அவர்கள் குளித்துள்ளனர். அப்போது அந்த குட்டை ஆழமாக இல்லை. கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் கரைப்பதற்காக அந்த குட்டை ஆழப்படுத்தப் பட்டுள்ளது.

    மேலும் அங்கு சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் சிறுவர்கள் குளித்த போது, அதில் இருந்த சேற்றில் சிக்கி இறந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×