என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்"
- நிலக்கோட்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சிறப்புரையாற்றி பேசினார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளரும், நிலக்கோட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவருமான யாகப்பன, மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி ஆகியோர் தலைமையிலும், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம், நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சிறப்புரையாற்றி பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் தவமணி, மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஊராட்சி மன்றத்தலைவர்கள் செல்வி ஜெயசீலன், முனிராஜா, பாண்டி, செல்வராஜ், மாவட்ட வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, நகர பொருளாளர் பூக்கடை சரவணன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூர் நிர்வாகி அண்ணாமலை நன்றி கூறினார்.