என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொழிசாளை மீன்கள்"
- கணவாய், இறால் போன்ற மீன்கள் சீசன் இல்லாத நிலையில் கொழிசாளை, நாக்கண்டம் போன்ற மீன்களை அதிக அளவில் பிடித்து வருகின்றனர்.
- வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
குளச்சல்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், மீன்பிடி துறை முகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 7 முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலும் ஏற்றுமதி ரக மீன்களான கணவாய், இறால், கிளிமீன் போன்ற மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது கணவாய், இறால் போன்ற மீன்கள் சீசன் இல்லாத நிலையில் கொழிசாளை, நாக்கண்டம் போன்ற மீன்களை அதிக அளவில் பிடித்து வருகின்றனர்.
இன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பிய விசைப்படகுகளில் டன் கணக்கில் கொழிசாளை மீன்கள் பிடிபட்டிருந்த நிலையில் அவைகள் விற்பனைக்காக துறைமுகத்தில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.
வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
இந்த நிலையில் சாதாரணமாக 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை ஆகும் கொழிசாளை மீன்கள் இன்று 20 ரூபாய்க்கு விலை சரிந்து கோழி தீவனத்திற்காக விற்பனை செய்யப்படுகிறது.