என் மலர்
நீங்கள் தேடியது "சாப்ட்வேர் இன்ஜினியர்கள்"
- மனைவியை பார்ட்டிக்கு அழைத்துச்சென்று தனது முதலாளியுடன் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.
- கணவன் மீது முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
மகாராஷ்டிர மாநிலம் கல்யான் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது முதலாளியுடன் உறவு வைத்துக்கொள்ள மறுத்த தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டிசம்பர் 19 அன்று 45 வயதான அந்த நபர் தனது 28 வயதுடைய 2வது மனைவியை அலுவலகத்தில் பார்ட்டிக்கு அழைத்துச்சென்று தனியறையில் தனது முதலாளியுடன் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு மனைவி மறுக்கவே, பெற்றோரிடமிருந்து ரூ.15 லட்சம் வாங்கித் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே தனது 2வது மனைவிக்கு அவர் உடனே முத்தலாக் கூறி வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்ய பணம் கேட்டு அந்த நபர் 2வது மனைவியை உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சம்பாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து முத்தலாக் கூறிய கணவன் மீது முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 2019 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மணமகன் தேவை என செய்தித்தாளில் வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- அதில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவு செய்து போன் செய்யவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மணமகன் தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியது. பெண் வீட்டார் தரப்பில் மணப்பெண்ணுக்கு யார் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்பதை தெரிவித்ததே இதற்கு காரணம்.
செய்தித்தாளில் வெளியான அந்த விளம்பரத்தில், சாட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து போன் செய்யவேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மணமகன் தேவை என்ற தலைப்பில் செய்தித்தாளில் வெளியான அந்த விளம்பரத்தில், 24 வயதான எம்.பி.ஏ. படித்துள்ள அழகான பணக்கார தொழில் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ், டாக்டர், தொழிலதிபர் மணமகன் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து போன் செய்ய வேண்டாம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பெண் வீட்டாரை தொடர்பு கொள்ள இ-மெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த விளம்பரத்திற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விளம்பரம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.