என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி தேர்வு"
- கடந்த 6ம் தேதி முதல் அசாமில் 11ம் வகுப்பு தேர்வு தொடங்கியது.
- அசாமில் 11 ஆம் வகுப்பு கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு தொடர்பாக புகார்கள் எழுந்தது.
அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24- 29ம் தேதி வரை நடக்க இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி முதல் அசாமில் தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு மார்ச் 29 அன்று முடிவடைய இருந்தது.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, மார்ச் 24- 29 வரை நடைபெற இருந்த அனைத்து 11 ஆம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்வதாக அசாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்தார்.
முன்னதாக அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த 9 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட அளவிலான போட்டிக்கு பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- எறிபந்து, இறகுபந்து, டெனிகாய்ட், பூப்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.
பரமக்குடி
பரமக்குடி வட்டார அளவிலான குழு மற்றும் தனித்திறன் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 38 பள்ளிகளைச் சேர்ந்த 1,200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தனித்திறன் போட்டிகளில் தட்டெறிதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், கம்பு ஊண்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய தனித்திறன் போட்டிகளிலும் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான எறிபந்து, இறகுபந்து, டெனிகாய்ட், பூப்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.
இந்த மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் கீழமுஸ்லிம் ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாகத்அலி, தாளாளர் ஜாஜஹான், தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.