என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போட்டி தேர்வு"
- பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது.
- சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் :
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஏழை மாணவர்கள் தனியார் மையங்களில் பயில, போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை.இவர்களுக்கு உதவும் வகையில், கல்வித்துறையும், பயிற்சிகள் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் போட்டித்தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, வாரத்தில் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 பயற்சி மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், (அதிகபட்சம் 50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்துக்கு), பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம், 20 மாணவர்கள்) தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :- மாணவர்களில், ஓ.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவை சார்ந்தவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களாக கொண்டு, பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
2017-18, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருப்பர். இந்த வாய்ப்பை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த பயிற்சியின் வாயிலாக போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றனர்.
- விருதுநகரில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
- மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு களுக்கு தயாராகும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்