என் மலர்
நீங்கள் தேடியது "திண்டுக்கல் சிறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்"
- திண்டுக்கல் கிளை சிறைச்சாலையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிய அதிகாரி கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் மற்றும் பொருட்கள் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
- தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் வருகிற 2025-ம் ஆண்டு ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குள்ளனம்பட்டி:
மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). இவர் திண்டுக்கல் கிளை சிறைச்சாலையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் மற்றும் பொருட்கள் கேட்பதாக ெதாடர்ந்து புகார்கள் வந்தன.
கடந்த 2 வருடத்திற்கு முன்பு மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை பார்க்க அவரது மனைவி வந்தபோது அவரிடமும் பணம் கொடுத்தால்தான் உனது கணவரை பார்க்க முடியும் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடியின் மனைவி கிளை சிறைச்சாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைதொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் ராஜேந்திரன் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதனைதொடர்ந்து திருச்சியில் சிறைக்காவலர் பயிற்சி பள்ளிக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார்.
தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் வருகிற 2025-ம் ஆண்டு ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.