search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.27 லட்சம்"

    • இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 650 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.70க்கும், சராசரியாக ரூ.85க்கும் ஏலம்போனது.

    காங்கயம்:

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 650 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,500 முதல் ரூ.7,650 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,600 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.25 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.33 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 3 விவசாயிகள் 61 மூட்டை கொப்பரைகளை விற்பனைக் கொண்டு வந்திருந்தனா்.

    இவற்றின் எடை 3,008 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா். இதில், கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.70க்கும், சராசரியாக ரூ.85க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.33 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    • முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் அருகே உள்ள அவினாசி கவுண்டர் பாளையம் பகுதியை சேர்ந்த வர் முத்துசாமி (வயது 68). விவசாயி. இவரது விவசாய நிலம் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே உள்ள இந்திரா நகரில் உள்ளது.

    வக்கீல் தோட்டம் என்று அழைக்கப்படும் அவரது தோட்டத்தில் பண்ணை வீடும் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் முத்து சாமி தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 9-ந் தேதி பண்ணை வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் ரூ.27 லட்சம் வைத்து விட்டு பீரோவை பூட்டி வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி முத்துசாமி பண்ணை வீட்டை பூட்டி விட்டு திருப்பூர் சென்று விட்டார். அப்போது அவர் பீரோவை பூட்டாமல் சென்று விட்டதாக கூறப்படு கிறது.

    இதற்கிடையே நேற்று முன் தினம் பண்ணை வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் தங்கராஜ் என்பவர் முத்துசாமிக்கு போன் செய்து வீட்டின் பின்புறம் உள்ள ஏணி சாய்ந்து கிடப்பதாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த முத்துசாமி உடனடியாக பவானிசாகர் பண்ணை வீட்டுக்கு வந்து பார்த்தார்.

    அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த ரூ.27 லட்சம் மாயமாகி இருந்ததும் தெரிய வந்தது.

    முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து முத்துசாமி பவானிசாகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசா ரணை நடத்தினர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கபட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாளவாடி போலீஸ் இன்ஸ் பெக்டர் செல்வம், கோபிசெட்டிபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் தனி தனியாக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    ×