என் மலர்
நீங்கள் தேடியது "பாலக்காடு ரெயில்"
- பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும்.
திருப்பூர் :
பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாலக்காடு-திருச்சி ரெயில் (எண்.16844) கரூர்-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதுபோல் திருச்சி-பாலக்காடு ரெயில் (எண்.16843) நாளை தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பாலக்காடு ரெயில் இன்று வழக்கம்போல் இயங்கும்.
- இந்த தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை
கோவில்பட்டியில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் - பாலக்காடு ரெயில்கள் இருமார்க்கங்களிலும் சாத்தூர் வரை இன்று பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அந்தப் பணிகள் நடக்கவில்லை. எனவே பாலக்காடு - திருச்செந்தூர் ரெயில் இருமார்க்கங்களிலும் இன்று வழக்கம்போல் இயங்கும். மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.