search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் பாதுகாப்பு"

    • தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகள் நல காவல் அலுவலர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள குழந்தைகள் நேய வளாகத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் மதுசூதன் ரெட்டி உடனிருந்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை முற்றிலும் பாதுகாக்கும் வகையில் முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 கோவில் தலங்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளையார் கோவிலும் ஒன்றாகும்.

    இன்றையதினம் காளையார்கோவில் வளாகத்திலும் இது தொடர்பாக கண்காணிப்பதற்கென, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டம் நடந்தது.

    இதன் அடுத்த கட்டமாக, பஸ் நிலையம், ெரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மேற்கண்ட நடைமுறைகளை செயல்படுத்தவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் குழந்தைகள் நேய வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இதில் 1098 எண்கள் மூலம் புகார்களின் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு அதற்கான முறையான தீர்வுகளும் காணப்பட்டு வருகிறது. வரும் முன் காப்போம் என்ற அடிப்படை யில் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அனைவரின் பங்களிப்பு இருக்கும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தை நல குழுத்தலைவர் சாந்தி, குழந்தைகள் நல காவல் அலுவலர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • குழந்தைகளுக்கான பல்வேறு சட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது. அவர் பேசுகையில், குழந்தைகள் சாலைபாதுகாப்பு விதிகளை நன்கு தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சாலை பாதுகாப்பு தொடர்பாக இங்கு விளக்கப்பட்ட காணொலியில் சாலைப்பாதுகாப்பு விதிமிறல்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை தவிர்கும் வழிமுறைகள் பற்றியும், பள்ளி குழந்தைகள் சாலைவிதிகளை பின்பற்றினால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும் என்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். குழந்தைகளுக்கான பல்வேறு சட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இதில் துணை போக்குவரத்து ஆணையர் ரவிசந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் குலசேகரமந்திர செல்வி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு சாலைபாதுகாப்பு விதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் சுமார் 750 மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • சைல்டு லைன் குறித்தும் விளக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் குப்பிடிச்சாத்தம் ஊராட்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு சமூக பணியாளர் நிரோஷா, கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு உறுதிசெய்தல், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து

    அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தடுப்பு குறித்து சைல்டு லைன் 1098 செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

    இதில், காவல் துறையினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

    • குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

    குழந்தைகளுக்கு எதிராக நிகழக்கூடிய அனைத்து தீங்குகள் மற்றும் தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் எனவும், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் இல்லாத குழந்தை நேய சமூகத்தை உருவாக்குவதோடு குழந்தைகளை மரியாதையோடும், மதிப்போடும், தோழமையோடும் நடத்துவேன் எனவும்... குழந்தைகளுக்கு உதவி தேவைப்படும் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்வேன் எனவும், 1098 ஐ அழைப்பேன் எனவும் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் விளக்கமாக பேசப்பட்டது.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குஞ்சப்பனை ஊராட்சி சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ரம்யா மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • 8 வார்டுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் பங்கேற்று குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

    திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு வாட்ஸ்ஆப் குரூப் மூலம் தகவல்களை பரிமாறி குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்தார். மேலும் 18 வயது வரை உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், 24 மணி நேர இலவச தொலைபேசி எண் 1098, அவசர போலீஸ் எண் 100, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக எண் 04575240166 அறிவிக்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி, சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    ×