என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணி மாற்றம்"
- நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்., மத்திய தொலைத் தொடர்பு துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
- உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடை பெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழக அரசின் இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழக அரசின் தொழில் துறை செயலாளராக உள்ள மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி கிருஷ்ணன் மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோல நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவராக உள்ள நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்., மத்திய தொலைத் தொடர்பு துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடை பெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக தொழில் முதலீட்டு பணிகளை கவனித்துக் கொண்டிருந்த தொழில்துறை செயலாளரான கிருஷ்ணன் மத்திய அரசுப் பணிக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு விடுவித்து தமிழக அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க உள்ளது.
மேலும் புதிய தொழில் துறை செயலாளர் நியமனம் தொடர்பாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் மது அருந்தி விட்டு பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார்.
- இந்த நிலையில் பணியின் ேபாது விடுப்பு நாட்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்தது.
சேலம்:
சேலம் வீராணம் போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணி புரிந்தவர் கதிரேசன் வயது (52), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் மது அருந்தி விட்டு பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் பணியின் ேபாது விடுப்பு நாட்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, வடக்கு துணை கமிஷனர் கவுதம் கோயலை விசாரிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் விசாரணை நடத்தி கமிஷனரிடம் அறிக்கை அளித்தார். இதையடுத்து கதிரேசனை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
- விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.
- ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சியின் ஆணையராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சுரேந்தர் ஷா பொறுப்பேற்றார். அதுமுதல் விழுப்புரம் நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தார். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வரி பாக்கிகளை வசூலிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இதன் மூலம் விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சுரேந்தர் ஷா விழுப்புரம் நகராட்சியில் இருந்து விடைபெற்று, திருவள்ளுவர் நகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- தியாகதுருகத்தில் ஊராட்சி செயலாளர்கள் பணி மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- முடிவில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி:
கோயமுத்தூர் மாவட்டத்தில் 84 ஊராட்சி செய லாளர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணி மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்களை மீண்டும் ஏற்கனவே பணிசெய்த இடத்திற்குமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கணேசன், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சந்திர சேகர், மாவட்ட இணை செயலாளர் தயாபரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, நிர்வாகி கள் மணிமொழி, லோகேஸ்வரி, அமுதா, பொற்செல்வி, செல்வராஜ், சுதாகர் சீனுவாசன், மாணிக்கம், சங்கீதா, செல்வி வைத்திநாதன், செல்வம், குப்புசாமிஉள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்